இந்தியாவிற்கு ஆபத்து.. உடனே இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புங்கள்.. சு.சாமி பரபரப்பு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையில் போராட்டம் மற்றும் கலவரம் நடக்கும் நிலையில் அந்நாட்டிற்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு விலைவாசி கட்டுக்கடங்காத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. மக்கள் கடுமையாக அங்கு அவதிப்பட்டு வரும் நிலையில் அரசுக்கு எதிரான போராட்டமாக இது உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் போராட்டத்திற்கு இடையில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். இதையடுத்து இத்தனை நாட்கள் அமைதியாக நடந்த போரட்டத்தில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்கள் கலவரம் செய்தனர்.

இந்தியா

இந்தியா

இலங்கையில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பக்சி தெரிவித்துள்ள கருத்தில், இந்தியா இலங்கையின் நிலைத்தன்மை, ஜனநாயகம், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை விரும்புகிறது. இலங்கையின் கொள்கைகளில் இந்தியா நம்பிக்கை கொண்டு இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே 3.5 பில்லியன் டாலர் உதவியை இலங்கைக்கு வழங்கி இருக்கிறோம். இந்த வருடம் மட்டும் இவ்வளவு பெரிய உதவியை செய்து இருக்கிறோம்.

 இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்

இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்

அவர்கள் பொருளாதார பிரச்சனையில் இருந்து மீண்டு வர வேண்டும். இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் உணர்வுகளை இந்தியா எப்போதும் மதிக்கும். இலங்கையில் நடக்கும் விவகாரங்களை கூர்ந்து கவனித்து வருகிறோம். அரசு மட்டுமின்றி இந்திய மக்களும், உணவு மருந்து கொடுத்து இலங்கைக்கு உதவி செய்துள்ளனர், என்று இலங்கை குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

சு.சாமி கருத்து

சு.சாமி கருத்து

இந்த நிலையில்தான் இலங்கையில் நடக்கும் விவகாரங்கள் பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். அதில், இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பி அரசியலமைப்பு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவிற்கு எதிரான அந்நிய சக்திகள் இலங்கை விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Srilanka-வில் Rajapaksa குடும்பத்துக்கு வந்த ஆபத்து.. தமிழர்களிடம் உயிர்பிச்சை கேட்ட நிலை !
    ராணுவத்தை அனுப்புங்கள்

    ராணுவத்தை அனுப்புங்கள்

    இலங்கையில் நடக்கும் மோதல்கள் இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இலங்கை போராட்டத்தை பயன்படுத்தி சீனா இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பினால் அது பெரிய சிக்கலாகும். இலங்கையை கைப்பற்ற கூட சீனா போன்ற நாடுகள் நினைக்கலாம். இலங்கையின் பொருளாதார நிலைக்கு சீனாவும் முக்கிய காரணம் ஆகும். இந்த நிலையில்தான் .இந்தியாவிற்கு எதிரான அந்நிய சக்திகள் இலங்கை விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+