சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தவ்ஹித் ஜமாஅத் ஆதரவு - செயற்குழுவில் முடிவு!
சென்னை: வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், இந்திய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உருமாற்றம் அடைந்து வருகிறது. வைரல் செய்திகள், பரபரக்கும் பிரேக்கிங்குகள், பிளாஷ் செய்திகள் என்று தகதக மோடில் உள்ளன.
ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற, மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மக்கள் நீதி மய்யம்
இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிவற்றை பற்றி பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டன.

மநீம சோகம்
இறுதியில், திமுக கூட்டணியை ஆதரிப்பது என்றும், இக்கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் களப்பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை முறையாக திமுக தலைமைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இறுதியில் தேர்வு
திமுக ஆதரவு என்பதைத் தாண்டி, தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் அறிக்கை தான் கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக தொடங்கி, நாம் தமிழர் வரை அவர்கள் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். சிறுபான்மையினர் வளர்ச்சி குறித்து அனைத்து கட்சிகளும் பேசி வரும் நிலையில், இறுதியில் அவர்கள் தேர்வு செய்திருப்பது திமுகவைத் தான்.

முணுமுணுக்கும் தொண்டர்கள்
இந்நிலையில், இதுபோன்ற சிறு சிறு அமைப்பு அல்லது கட்சிகள் கூட நம்மை நம்ப யோசிக்கிறார்களே என்று கமல்ஹாசன் ரொம்பவே வருத்தப்படுகிறாராம். மாற்றத்தை நோக்கி எனும் புதிய அரசியல் அத்தியாயத்தை எழுத நினைத்தாலும், திமுக, அதிமுகவை நோக்கியே சிறு கட்சிகள் நகர்கிறதே என்று முணுமுணுக்கின்றனர் மநீம தொண்டர்கள்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications