மக்களை சிரமப்படுத்த வேண்டாம்... இ-பாஸ் முறையை ரத்து செய்க - இந்திய தவ்ஹீத் ஜமாத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசே இ-பாஸ் வேண்டாம் எனக் கூறிய பிறகும் அதனை தமிழக அரசு தொடர்வது ஏன் என இந்திய தவ்ஹீத் ஜமாத் கேள்வி எழுப்பியுள்ளது.

வெளிப்படைத் தன்மை இல்லாத இ-பாஸ் முறை ஊழலுக்கு வழிவகுப்பதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

india thowheed jamath demands, cancel e-pass system

இது தொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் முகமது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''கொரோனா தொற்றுப் பரவலை சாக்கு வைத்து தமிழக அரசு பொதுப் போக்குவரத்தை முடக்கி வைத்திருக்கிறது.மேலும் அவசர காலத் தேவைகளுக்கு தனியார் வாகனங்களில் ஊரு விட்டு ஊர் செல்ல இ- பாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

சுமார் நான்கைந்து மாதங்கள் இந்த இ- பாஸ் முறை நடப்பில் இருந்து வருகிறது.இந்த இ-பாஸ் எடுப்பதும் அவ்வளவு எளிய காரியம் இல்லை.இணைய வழியில் தான் பெற முடியும் என்றாலும் இணைய தொடர்போ,பழக்கமோ இல்லாதவர்கள் பாஸ் எடுப்பது சிரமமாக இருக்கிறது.விண்ணப்பங்கள் பலமுறை நிராகரிக்கப்படுகிறது.அதே நேரம், தமிழகம் முழுவதும் இ-பாஸ் வழங்குவதில் தாராளமாக முறைகேடுகள் நடந்து வருகிறது.இ-பாஸ் வழங்குவதில் வெளிப்படைத் தன்மையும் இல்லை.

இ-பாஸ் கட்டாயமில்லை என்று மத்திய அரசே அறிவித்திருக்கும் போது தமிழக அரசு இ-பாஸை கட்டாயமாக்கி இருப்பது மக்களை சிரமத்திற்குள்ளாக்குகிறது.எனவே,ஊழலுக்கு பெரிய அளவில் இடமளித்திருக்கும் இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்து விட்டு மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு தடையின்றி பயணம் செய்ய தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது''.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+