ரூ.3000 கோடி.. இந்தியா கையில் எடுக்கும் "பாகுபலி" ஆயுதம்.. சீனா, பாகிஸ்தானுக்கு தரமான செக்!
டெல்லி: அரசு நடத்தும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்திடமிருந்து 500 Invar anti-tank guided missiles எனப்படும் ராணுவ டேங்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை (ATGMs) கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் வெளியிட்டு உள்ளது. இதன் விலை ரூ.2,000 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா போல இந்தியா தனது பாதுகாப்பு துறைக்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்ய உள்ளது. இதுவரை இந்தியா தனது ஜிடிபியில் 2% மட்டுமே பாதுகாப்பு துறைக்கு செலவு செய்தது. இனி கூடுதலாக இந்தியா பாதுகாப்பு துறைக்கு செலவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூன் - ஜூலை மாதங்களில் துணை பட்ஜெட் மூலம் இந்த கூடுதல் தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒதுக்கீடு ரூ.7 லட்சம் கோடியை தாண்டும் என்று கூறப்பட்டு உள்ளது
கடந்த பிப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025/26 பட்ஜெட்டில், ஆயுதப்படைகளுக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஒதுக்கீடு ஏற்கனவே 2024/25 ஆம் ஆண்டில் ரூ.6.22 லட்சம் கோடியாக இருந்ததை விட 9.2 சதவீதம் அதிகமாகும்.
இப்போது அதிகரிக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடு அடுத்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான ஒப்புதல் கோரப்படும் . ஆராய்ச்சி, மேம்பாட்டிற்கு, ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற தேவையான உபகரணங்களை வாங்குவதற்கும் இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும். அதேபோல் அவசர தேவைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இன்றி தொகை ஒதுக்கீடு செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஆர்டர்
இந்த நிலையில்தான் அரசு நடத்தும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்திடமிருந்து 500 Invar anti-tank guided missiles எனப்படும் ராணுவ டேங்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை (ATGMs) கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் வெளியிட்டு உள்ளது. இதன் விலை ரூ.2,000 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எதிரி நாட்டு டேங்கர்களை தாக்கி அழிக்கும் வகையில் மத்திய அரசு இந்த ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ளது. இது ஒரு டேங்கில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணை ஆகும். மொத்தமாக 500 ஏவுகணைகளை வாங்க உள்ளனர். ஏற்கனவே இதை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. இந்திய ராணுவ படைக்கு இது முக்கிய பாதுகாப்பை வழங்கும் நிலையில், இந்த கொள்முதல் கூடுதல் பலத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மோஸ் ஏவுகணை
இன்னொரு பக்கம் பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட புதிய மாடலை கூட்டாக தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ரஷ்யாவும் தொடங்கியுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பாகிஸ்தானுடனான மோதலின் போது பிரம்மோஸ் ஏவுகணை திறம்பட பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அதிக திறன் கொண்ட புதிய மாடல் பிரம்மோஸ் ஏவுகணைக்கு ரஷ்யாவிற்கு இந்தியா முழு தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. புது தில்லிக்கும் மாஸ்கோவிற்கும் இடையே ஆரம்ப பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்துள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்பை 800 கி.மீ ஆக விரிவுபடுத்துவதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதை எடையை குறைப்பது, தூரத்தை அதிகரிப்பது, விமானத்தில் இருந்து ஏவும் வகையில் சிறிய வகைகளை உருவாக்குவது என்று பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட புதிய மாடலை கூட்டாக தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ரஷ்யாவும் தொடங்கியுள்ளன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications