நெருங்கும் லோக்சபா தேர்தல்! வேகமாக பரவும் போலி தகவல்கள்.. லிஸ்டில் இந்தியாதான் டாப்! ஷாக் ரிப்போர்ட்
சென்னை: உலக அளவில் அதிக போலி தகவல்கள் பரப்பப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக ஆய்வு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த ஆய்வறிக்கை விவாதங்களை கிளப்பியுள்ளது.
போலியான தகவல்கள் ஒரு நாட்டின் ஆட்சியையே மாற்றும் அளவுக்கு சக்தி கொண்டவை. அதெல்லாம் அப்போ சார், இப்போ யார் இப்படி செய்றாங்க? என்று பலரும் கேள்வியெழுப்பலாம். ஆனால், இந்த டிஜிட்டல் காலத்தில்தான் பொய்கள் அதிகமாக, வேகமாக பரப்பப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

2024ம் ஆண்டு என்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்த ஆண்டில் உலகின் ஏறத்தாழ பாதி நாடுகளில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்த நேரத்தில் போலியான தகவல்கள் அதிகம் பரப்பப்படுகிறது. இதனை Statista புள்ளியியல் இதழ் அலசி ஆய்வு செய்து, எந்தெந்த நாடுகளில் அதிகமாக தவறான தகவல்கள் அதிகம் பரப்பப்படுகிறது என்கிற பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னரும் கூட, கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிக அளவு பொய் செய்திகள் உலா வந்திருக்கின்றன. அதன் பின்னர் கொரோனா தொற்று காலத்தில் இதேபோன்று செய்திகள் உலா வந்திருக்கின்றன. டிஜிட்டல் தளத்தில் உலா வரும் இப்படியான செய்திகள் நிஜ உலகில் வன்முறைகளாக வெடிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்தியா தவிர எல் சால்வடார், சவுதி அரேபியா, பாக்கிஸ்தான், ருமேனியா, அயர்லாந்து, செக்கியா, அமெரிக்கா, சியரா லியோன், பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் போலி செய்திகளால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் என Statista இதழ் கூறியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல்கள் கல்வித்துறை, வணிகம், அரசாங்கம், சர்வதேச சமூகம் மற்றும் சிவில் சமூகம் முழுவதும் உள்ள 1,490 நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கி அக்டோபர் மதம் 9ம் தேதி வரை சேகரிக்கப்பட்டுள்ளது.
போலி தகவல்களை விளக்கி அவ்வப்போது உண்மை செய்திகள் பதிவிடப்பட்டாலும், அது போலி செய்திகள் பரவுவதை போல வேகமாக பரவுவது கிடையது. எனவே அரசு தரப்பில் போலியான செய்திகள் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications