இனிமே பெட்ரோல், டீசல் விலை அடியோடு குறையும்.. வருகிறது எத்தனால் கலப்பு.. மோடி எடுத்த முக்கிய முடிவு
சென்னை: அடுத்த இரண்டு மாதங்களில் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா அடையும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த புதிய பெட்ரோல் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 15.9% ஆக தற்போது உள்ளது. டீசலில் எத்தனாலைக் கலப்பதற்குத் தேவையான தொழிற்சாலை ஒன்றை அரசாங்கம் கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

டீசலில் எத்தனால் கலப்பதால் செலவு குறையும். மைலேஜ் மாற்றம் அடையாது. அது சுற்றுச்சூழலுக்கு நல்லது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தும். இதனால் பெட்ரோல் ; டீசல் விலை குறையும். பொதுவாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரித்து பொருட்களின் விலை குறையும். சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) 2018-19 இது தொடர்பாக சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. எத்தனால் கலந்த எரிபொருள் மூலம் BS-III மற்றும் BS-VI பேருந்துகளில் வாகன செயல்திறன், உமிழ்வு மற்றும் ஆயுள் ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக சோதனை செய்யப்பட்டது. 500 மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில் பெரிய தோல்வி, பிரச்சனை எதுவும் பதிவாகவில்லை. எரிபொருள் நுகர்வு சாதாரண டீசலை விட சற்றே குறைவாக இருந்ததை பைலட் திட்டத்தில் கண்டறிந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், எத்தனால் கலந்த டீசலின் சோதனை இதுவரை BS-VI வாகனங்களில் செய்யப்படவில்லை. எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பாக கனரக வாகனத்தில் எரிபொருளின் சோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். டீசலுடன் எத்தனால் கலப்பது சோதனை நிலையில் இருப்பதாகவும், விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்றும் அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
விலை உயர்வு;
இந்தியாவில் கடந்த வருடம் பாதி வரை பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.
நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 வருடங்களில் இதுதான் மிக அதிகம் ஆகும்.
தற்போது டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications