2 பேர் மட்டும் போதும்.. 60 ஆட்களின் வேலையை ஒரே ஆளாக செய்யும் இயந்திரம்! சென்னையில் அறிமுகம்
சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஏற்கனவே இடநெருக்கடி உள்ள நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு, ஷாப்பிங் மால்கள் கட்டுவதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. சென்னையில் பல இடங்களில் அடையாளமாக இருந்த பழங்கால கட்டடங்கள் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு, ஷாப்பிங் மால்களாக மாறி உள்ளன.
சென்னை, பெங்களூர் உள்பட பல முக்கிய நகரங்களில் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் அதிகளவில் குடியேறி வருகின்றனர். இதனால் இந்த முக்கிய நகரங்களில் மக்கள்தொகை அதிகரித்து வருகின்றன. இதனால் மக்களுக்கு ஏற்ப அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் புதிது புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.

சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஏற்கனவே இடநெருக்கடி உள்ள நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு, ஷாப்பிங் மால்கள் கட்டுவதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய கட்டங்கள் இடிக்கப்படுகின்றன. சென்னையில் பல இடங்களில் அடையாளமாக இருந்த பழங்கால கட்டங்கள் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு, ஷாப்பிங் மால்களாக மாறி உள்ளன.
அந்த வகையில் சென்னை ஆர்கே சாலையின் அருகே கிளாரியன் ஹோட்டல் பிரசிடென்ட் உள்ளது. இந்த ஹோட்டல் என்பது 1978 ம் ஆண்டு முதல் ஆர்கே சாலையின் அடையாளமாக இருக்கிறது. இந்நிலையில் தான் தற்போது அந்த ஹோட்டல் இடிக்கப்பட்டு வருகிறது. ஹோட்டலுக்கு பதில் சொகுசு வசதிகள் கொண்ட அடுக்குமாடிகுடியிருப்பு என்பது கட்டப்பட உள்ளது.
இந்நிலையில் தான் அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கி வரும் கிளாரியன் ஹோட்டல் பிரசிடென்ட் கட்டடத்தை இடிக்க தென்கொரியாவில் உள்ள வால்வோ நிறுவனத்தின் பிளான்ட்டில் இருந்து 75 டன் கிராவ்லர் எக்காவாட்டர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் என்பது மொத்தம் 33 மீட்டர் உயரம் கொண்டது. இதனால் 100 அடிக்கு மேலே உள்ள கட்டடத்தை இடிக்க முடியும்.
இந்த இயந்திரம் பற்றி சங்கத்தின் நிறுவன தலைவர் மோகன் ராமநாதன், ‛‛சென்னையில் உயரமான கட்டடங்களை இடித்து அகற்றுவது என்பது பெரும் சவாலாக உள்ளது. இதற்கு புதிய தொழில்நுட்பம் என்பது தேவையான ஒன்றாக உள்ளது. இந்த மெஷினில் உள்ள தொழில்நுட்பம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லலாம்.
இந்த இயந்திரம் பாதுகாப்பான முறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த இயந்திரம் மூலம் கட்டடங்களை இடிக்க முடியும். தரையில் இருந்தபடி இந்த இயந்திரம் 100 அடி உயர கட்டடத்தை இடித்து தரைமட்டமாகும். இந்த வகையான இயந்திரம் தென்இந்தியாவில் முதல் முறையாக இப்போது தான் பயன்படுத்தப்படுகிறது'' என்றார்.
பிகே யூனிக் ப்ராஜெக்ட்டின் நிர்வாக இயக்குநர் பால்துரை கண்ணன் கூறுகையில், ‛‛முன்னதாக சென்னை மவுலிவாக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வெடிவைத்து அடுக்குமாடி கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்படி கட்டடம் தகர்க்கப்படும்போது ஏராளமான புகை வெளிவந்தது. இதனால் மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது. ஆனால் இந்த இயந்திரத்தை பயன்படுத்துவது என்பது Low Risk பணியாகும்.
இதில் ஸ்பெஷல் என்னவென்றால் ஒரு ஆபரேட்டர், ஒரு ஹெல்பர் என மொத்தம் 2 பேரால் 100 அடிக்கும் உயரமான கட்டடத்தை மொத்தமாக இடிக்க முடியும். அதோடு சுற்றுச்சூழல் என்பாது மாசுபடாது. உதாரணத்துக்கு ஒரு கட்டடத்தை இடிக்கும் பணிக்கு 60 பேர் தேவை என்ற நிலையில் தற்போது வெறும் 2 ஆட்கள் போதுமானதாக உள்ளது. அதோடு மனிதர்களை பயன்படுத்தி கட்டடத்தை இடிக்கும் பணி என்பது மொத்தம் 6 மாதங்கள் வரை நடக்கும். ஆனால் இந்த இயந்திரத்தை பயன்படுத்தும்போது அதிகபட்சமாக 20 நாட்களில் பணியை முடிக்க முடியும்’’ என்றார்.
இதுபற்றி வால்வோ கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் இந்தியா வளர்ச்சி பிரிவு ( உற்பத்தி மற்றும் சில்லரை விற்பனை) சூரத் மேத்தா கூறுகையில், ‛‛இந்த இயந்திரத்தின் மொத்த மதிப்பு என்பது ரூ.5.5 கோடியாகும். இந்தியாவில் மொத்தம் 2 இயந்திரங்கள் மட்டுமே வந்துள்ளன. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி இடிக்கும்போது மெஷின் ஆபரேட்டருக்கு கட்டடத்தின் தன்மை பற்றிய சிக்னல் செய்ய சென்சார்கள் உள்ளன இடிப்பு பணியின் போது ஆபரேட்டருக்கு வழிகாட்ட சென்சார்கள் உள்ளன என்று வோல்வோ CE இன் தலைமை உற்பத்தி மற்றும் சில்லறை மேம்பாட்டாளர் சூரத் மேத்தா கூறுகிறார்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications