தமிழ்நாட்டை மட்டுமல்ல.. இந்தியாவையே மாற்ற போகும் திட்டம்.. தனுஷ்கோடி இலங்கை இடையே வருகிறது பாலம்!
சென்னை: தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் இருக்கும் தலை மன்னாரை இணைக்கும் விதமாக கடல் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
கடந்த வருட தொடக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் சேது சமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் அதிரடியாக தீர்மானத்தைத் தாக்கல் செய்தார் அவரின் தனி தீர்மானம் தொடர்பாக சட்டசபையில் வெற்றிபெற்றது.

கடலுக்கு அடியில் ராமர் பாலமே இல்லை என நாடாளுமன்றத்தில் கடந்த 2022 டிசம்பர் மாதம் மத்திய பாஜக அரசு அறிவித்தது. இதையடுத்தே தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த திட்டத்தை பாஜக சட்டசபையில் கடுமையாக எதிர்க்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவும் இந்த திட்டத்தை ஆதரித்தது.
இன்று திட்டத்தை ஆதரித்து சட்டசபையில் பேசிய நயினார் நாகேந்திரன், ராமரை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம். அப்படி இருக்கும் போது ராமாயணம் கற்பனை என்றெல்லாம் நீங்கள் சொல்ல கூடாது. ராமர் பாலம் கட்டினாரா என்று தெரியாது.. இது தெய்வ நம்பிக்கை தொடர்பானது. இதை எல்லாம் எப்படி அனுமதிக்க முடியும். சேது சமுத்திர திட்டம் வந்தால் உண்மையில் நான்தான் மகிழ்ச்சி அடைவேன். நான் தென் மாவட்டத்தை சேர்ந்தவன். தென் மண்டலம் இதனால் வேகமாக வளர்ச்சி அடையும்.

திட்டத்தின் பின்னணி: தென் மண்டலத்தில் கடல் வழி போக்குவரத்து எளிமையாக்கும். இதனால் தென் மண்டலம் வளம் பெறும். அதனால் இந்த திட்டத்தால் அதிகம் சந்தோசம் அடையும் நபராக நான்தான் இருப்பேன். முதலில் வாஜ்பாய் காலத்தில் இதற்காக சோதனைகள் செய்யப்பட்டன. இங்கே பெரிய டீம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில் திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என்று ரிப்போர்ட் தயாரிக்கப்பட்டது. அதன்பின் மன்மோகன் சிங் காலத்தில் இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
கருணாநிதி இதற்காக குரல் கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த திட்டம் பற்றி பேசி வந்தார். ஆனால் இந்த பகுதி ஆழம் இல்லாத பகுதி. இங்கே மண் எடுக்க எடுக்க மண் சரியும். இதனால் இங்கே கட்டுமானம் செய்வது மிகவும் கடினம். இங்கே பெரிய ஆழம் இல்லை. பக்கத்திலேயே மண்டபம் இருக்கிறது. அதனால் இங்கே போக்குவரத்து மிகவும் கடினம். அதேபோல் இது தெய்வமாகி மதிக்கப்படும் ராமர் கட்டியதாக நம்பப்படும் பாலம். அதை எல்லாம் நினைவில் வைத்து இங்கே கட்டுமானத்தை தொடங்க வேண்டும்.
கட்டுமானம்: இந்த திட்டத்தை கொண்டு வந்தால் எங்களை விட யாரும் அதிகமாக மகிழ்ச்சி அடையமாட்டார்கள். ராமர் பாலத்திற்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும். அதை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்தால் அதற்கு பாஜக ஆதரவு தரும். இங்கே இருக்கும் கட்டுமான பலத்தை ஆய்வு செய்ய வேண்டும். முறையாக ஆய்வு செய்த பின்பே இந்த திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தோம். அதனால் இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசினார்.
கடல் பாலம்: இந்த சேது சமுத்திர திட்டம் இன்னும் தொடங்காத நிலையில், தற்போது தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் இருக்கும் தலை மன்னாரை இணைக்கும் விதமாக கடல் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக வந்த நிலையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு சென்று ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் அரிச்சல் முனையை பார்வையிட்டதோடு, கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார். இந்த நிலையில்தான் தற்போது இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வங்காள விரிகுடாவின் குறுக்கே இந்தியாவில் உள்ள #தனுஷ்கோடி மற்றும் இலங்கையை இணைக்கும் 23KM கடல் பாலத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை மத்திய அரசு நடத்த முடிவு செய்துள்ளது. . இத்திட்டம் நிறைவேறினால், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகத்திற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலேயே இது பெரிய திடமாக இருக்கும். அதோடு மிக முக்கியமாக பாதுகாப்பு ரீதியாக இந்தியா - இலங்கை இடையிலான உறவை புதுப்பிக்கவும், சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை எதிர்க்கவும் இந்த திட்டம் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications