எல்லா பக்கமும் சிவப்பு.. பெரிய சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. பதறிய முதலீட்டாளர்கள்! பின்னணி
சென்னை: கடந்த ஒன்றரை வருடங்களாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில்.. நேற்றும் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இன்றும் லேசான சரிவுடன் சந்தை தொடங்கி உள்ளது.
நேற்று சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் (1.28%) சரிந்து 82,180.47 ஆகவும், நிஃப்டி 353 புள்ளிகள் குறைந்து 25,232.50 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இச்சரிவு முதலீட்டாளர்களின் முதலீட்டில் கடுமையான சரிவை ஏற்படுத்தியது. பங்குசந்தையில் பல வாரங்களில் இல்லாத மிகக் குறைந்த நிலைக்குத் தள்ளியது. இந்த சரிவிற்கு பின் பல முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. சர்வதேச மார்க்கெட் சரிவது இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு உள்ள வர்த்தக போர், உலக நாடுகள் மீதான போர் அழுத்தம் காரணமாக .. இந்த வாரம் மார்க்கெட் மிக மோசமாக தொடங்கி உள்ளது. சீனாவில் கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக மார்க்கெட் சரிந்து உள்ளது. உலகம் முழுக்க ஒரே கையெழுத்தில் பொருளாதார அழிவை தூண்டிவிட்டுள்ளார் டிரம்ப்.
உலக அளவில் எந்தெந்த மார்கெட்டுகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன என்று இங்கே பார்க்கலாம்.
பங்கு சந்தை சரிவால் ஜப்பான் மார்க்கெட் மூடப்பட்டது
ஜப்பானின் நிக்கேய் 225 9% குறைந்தது
சிங்கப்பூர் பங்குச் சந்தை 5.5% சரிவு
மலேசியா பங்குச் சந்தை 4% சரிவு
ஹாங்காங் பங்குச் சந்தை 8.8% சரிவு
தைவானின் செமிகண்டக்டர் நிறுவனமான TSMC 10% சரிந்தது
தைவான் பங்கு குறியீடு திறந்த நிலையில் 9.8% சரிந்தது
ஜெர்மனி பங்குச் சந்தை எதிர்காலம் 5% குறைந்தது
ஜப்பானின் TOPIX வங்கிக் குறியீடு 14%க்கு மேல் குறைந்துள்ளது
ஷாங்காய் கச்சா எண்ணெய் 7% குறைந்தது
ஆஸ்திரேலிய பங்குச்சந்தை 6.4 சதவீதம் சரிவு
நாஸ்டாக் 100 ஃபியூச்சர்ஸ் 6%க்கு மேல் வீழ்ச்சி
பிட்காயின் $78,000 க்கு கீழ் வருகிறது
இதன் காரணமாக இந்திய மார்க்கெட்டும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
கிரிப்டோ மார்க்கெட் சரிவு
மொத்த கிரிப்டோ மார்க்கெட் கேப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிப்டோ சந்தைக் குறியீடு, $2.5 டிரில்லியனில் இருந்து $2.38 டிரில்லியனாக 4.8% சரிந்தது.. டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போருக்கு இடையே கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டது. கடந்த சில நாட்களில் 27% சதவிகிதம் வாய் சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே நாளில் 2800 கோடி ரூபாய் வாஷ் அவுட் ஆகி உள்ளது.
1 லட்சத்திற்கு மேல் இருந்த பிட்காயின் 70 ஆயிரம் டாலருக்கு கீழ் சென்றுள்ளது. உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின். இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.












Click it and Unblock the Notifications