Vande Bharat: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. தாமதம் ஆவதற்கு காரணம் இதுதானா? கண்டறியப்பட்ட மேஜர் குறைபாடுகள்
சென்னை: வந்தே பாரத் (Vande Bharat) ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்த காரணத்தால், அடுத்ததாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்தது. 16 பெட்டிகள் கொண்ட ஏசி ரயிலாக கடந்த ஆண்டே தயார் செய்யப்பட்ட நிலையில் இன்னமும் பயன்பாட்டுக்கு வராதது பயணிகளுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் தாமதத்திற்கான காரணத்தினை ரயில்வே வெளியிட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் தனி மவுசு உள்ளது. கட்டணம் கொஞ்சம் அதிகமாக உள்ளது என்ற ஆதங்கம் இருந்தாலும் வந்தே பாரத் ரயிலின் வேகம், சொகுசு வசதிகள் ஆகியவற்றால் அந்த ரயில்களை பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் இருக்கை வசதி கொண்டதாகும். அதேபோல், பகல் நேர சேவையாகவே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தொலை தூரங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களை போல வந்தே பாரத் ரயில் சேவையும் நீண்ட தூரத்திற்கு இயக்க வேண்டும், ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய ரயில்களாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
பயணிகளின் இந்த கோரிக்கையை ஏற்று வந்தே பாரத் ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்கள் தயாரிக்கப்பட்டன. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில், முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்தன. இந்த பெட்டிகளை, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஆய்வு செய்திருந்தார்.
எப்போது தான் பயன்பாட்டுக்கு வரும்?
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், சென்னை ஐசிஎப் தொழிற்சாலைக்கு இந்த ரயில்கள் கொண்டு வரப்பட்டன. 16 AC பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில்கள், ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் பயணிகளை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டமும் முடிந்த நிலையில், ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பயணிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
ஆனால், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவது தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வருகிறது. இந்த ரயில்கள் கடந்த செப்டம்பர் மாதமே அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்ட நாட்களை கடந்தும் இந்த ரயில்கள் இயக்குவதற்கு தாமதமாகிக்கொண்டே வருவது பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
சரியாக வடிவமைக்கப்படவில்லை
இந்த சூழலில் வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்கு தாமதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வடிவமைப்பு மற்றும் சப்ளை செயினில் முக்கியமான மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தாமதமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல், படுக்கை அமைப்புகளில் உள்ள முனைகள் கூர்மையாக இருப்பதால் பயணிகள் தெரியாமல் இடித்துக்கொண்டால் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே பாதுகாப்பு வாரியம் சுட்டிக்காட்டியுள்ளதாம். ஜன்னல் திரைச் சீலைகளைப் பிடிப்பதற்கான கைப்பிடிகள் சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை.
சரி செய்த பிறகு சேவை தொடங்கப்படும்
படுக்கை இணைப்புகளுக்கு இடையே உள்ள சில இடைவெளிகள் காரணமாக, அந்த பகுதிகளைச் சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் சிக்கல்கள் எழும் போன்ற குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இயக்குநர் ஜெனரல், ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) மற்றும் அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளது. ரயில்வே வாரியம் சுட்டிக்காட்டியிருக்கக்கூடிய இந்த சிறிய பிரச்சினைகளை சரி செய்த பிறகே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை இயக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications