ரயில் நிலையங்களில் தரமான உணவு! புதிய விதிகளை வெளியிட்டது ரயில்வே!
சென்னை: ரயில் நிலையங்களில் கேஎஃப்சி, மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட பிரபல உணவகங்கள் அமைக்க ரயில்வே துறை புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு ஆன்லைனில் ஏலம் மூலம் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அது போல் தரமான உணவை அனைத்து தரப்பினரும் சாப்பிட வேண்டும் என்ற நோக்கிலும் இந்த ஆன்லைன் ஏல முறை கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து தமிழக ரயில் தகவல்கள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரயில் நிலையங்களில் கே.எஃப்.சி., மெக்டொனால்ட்ஸ்: பிரபல உணவகங்கள் வர ரயில்வே புதிய விதிகள் வெளியீடு!
ரயில் பயணிகளுக்கு உயர்தரமான உணவுத் தேர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்திய ரயில்வே வாரியம் முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் கே.எஃப்.சி., மெக்டொனால்ட்ஸ், பிகானேர்வாலா போன்ற பிரபல தேசிய மற்றும் பன்னாட்டு உணவு நிறுவனங்களின் உணவகங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும்.
திட்டத்தின் பின்னணி
தற்போது நாடு முழுவதும் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் சுமார் 2.3 கோடிப் பயணிகள் பயணிக்கும் நிலையில், தரமான உணவகங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
நான்காவது வகை கடை: இதுவரை டீ, சிற்றுண்டி மற்றும் ஜூஸ் போன்ற மூன்று சிறிய வகை கடைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. தற்போது 'பெரிய நிறுவன உணவகங்கள்' என்ற நான்காவது வகை சேர்க்கப்பட்டுள்ளது.
ஏல முறை: இந்தக் கடைகளுக்கான இட ஒதுக்கீடு ஆன்லைன் ஏலம் மூலமே நடைபெறும். அதிக ஏலத்தொகை செலுத்தும் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்குச் செயல்பட அனுமதி வழங்கப்படும்.
சமூக நீதி: தற்போதைய சமூக ஒதுக்கீட்டின் கீழ் செயல்படும் கடைகள் (பழங்குடியினர், சுதந்திரப் போராட்ட வீரர்கள் போன்றோருக்கான ஒதுக்கீடு) பாதிக்கப்படாது என்றும், புதிய கடைகள் அவர்களுக்குப் போட்டியாக அமையாது என்றும் ரயில்வே வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது பயணிகளுக்குச் சுத்தமான சூழலையும், பலதரப்பட்ட உணவு வகைகளையும் அளிக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications