இந்தியன் ரயில்வேயில் வேலை.. மாதம் 34 ஆயிரம் சம்பளம்.. ஒரு நாள் தான் டைம் இருக்கு.. விட்றாதீங்க
சென்னை: இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 2,570 பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை ஒரு நாள் தான் டைம் இருக்கிறது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். டிப்ளமோ, என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமான ரயில்வேயில் பல்வேறு பணியிடங்கள் உரிய அறிவிப்பு வெளியிட்டு ஆர்.ஆர்.பி எனப்படும், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் என்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கான ஜூனியர் என்ஜினியர், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர், வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை ஒரு நாள் தான் கால அவகாசம் இருக்கிறது. எனவே அதற்குள் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து விடுங்கள். இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் என்ஜினியர், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர், வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் ஆகிய பணிப்பிரிவுகளில் மொத்தம் 2,570 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வி தகுதி
* ஜூனியர் என்ஜினியர், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர் பணிக்கு 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் பணிக்கு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
வயது வரம்பு:
* வயது வரம்பானது 30.11.2025 அன்று தேதிப்படி கணக்கிடப்படும். 18 வயது நிரம்பியவர்களும் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* அரசு விதிமுறைகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தை பொறுத்தவரை 7 வது ஊதிய கமிஷன் நிலை 6-ன் படி ஆரம்பமே ரூ.35,400 வழங்கப்படும்.
தேர்வு முறை:
* கணினி வழியில் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும்.
* சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
* பொது பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.
* எஸ்சி/எஸ்டி, பெண்கள் உளிட்டோருக்கு ரூ.250 கட்டணம் ஆகும்.
* முதல் கட்ட தேர்வு எழுதுபவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். விண்ணப்பிக்க நாளை புதன்கிழமை தான் கடைசி நாள் ஆகும். எனவே அதற்குள் விண்ணப்பித்து விடுங்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrbapply.gov.in/#/auth/landing












Click it and Unblock the Notifications