ரயில் பயண முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைப்பு.. இன்று முதல் அமலுக்கு வந்தது! ரயில்வே அசத்தல்
சென்னை: இந்திய ரயில்வேயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கை தாண்டி வரும் நிலையில், தற்போது 120 நாட்களுக்கு முன்பே சீட்களை முன்பதிவு செய்யும் நடைமுறை முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்ற புதிய நடைமுறை இன்று (நவ.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.

சராசரியாக ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கட்டணம் பாதுகாப்பான பயணம் என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய ரயில்வே பயணிகளின் வரப் பிரசாதமாக திகழ்கிறது.
அருகருகே இருக்கும் நகரங்களை இணைக்கும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்களை தவிர தொலைதூரங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்யும் அதிவிரைவு வண்டிகள் என தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இந்தியாவில் இயக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தேஜஸ் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் ரயில் உள்ளிட்டவையும் கூடுதலாக இந்தியாவில் இந்தியன் ரயில்வே சார்பில் சேவையை வழங்கி வருகிறது.
அதே நேரத்தில் மக்கள் தொகை பெருக்கம் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு ஆகியவை இந்திய ரயில்வேக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கிறது. 100 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய முன்பதிவில்லா பெட்டிகளில் ஆயிரம் பேர் பயணம் செய்யும் நிலை கூட உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க ரயில்வே முன்பதிவிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. 120 நாட்களுக்கு முன்பு ரயில்வேயில் எதிர்கால பயணத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். விழா காலங்கள் உள்ளிட்டவற்றுக்காக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு வசதி இருக்கிறது. ஆனால் நீண்டகால எதிர்கால பயணத்திட்டத்தின் படியே தற்போது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டு வந்தது. இனி அவ்வளவு நாட்கள் காத்திருக்க தேவையில்லை. பயண தேதிக்கு 60 நாட்கள் முன்கூட்டி மட்டுமே ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளும் வசதி நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி இன்று முதல் பயணிகள் தங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஏற்கனவே 120 நாட்களுக்கு முன்கூட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 31.10.2024 நள்ளிரவு முதலில் இந்த வசதி அறிமுகத்துக்கு வந்துள்ளது. அதேபோல நேற்று நள்ளிரவு முதல் புக்கிங் செய்த ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களில் பயணிக்கும் பயணிகள் குறித்த கணக்கெடுப்பை ரயில்வே எடுத்தது. அதில் ஒரு வருடத்தில் குறிப்பிட்ட மாநிலம் அல்லது நகரத்திற்கு பலமுறை பயணம் செய்யும் 50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் கண்டறியப்பட்ட.னர். அதன் அடிப்படையில் சிறப்பு ரயில்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications