ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரானை ஏமாற்றி இந்திய மாலுமி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளார்.. மிகவும் தந்திரமான முடிவை எடுத்த மாலுமி பத்திரமாக மும்பை வந்து சேர்ந்தது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை ஷென்லாங் சூயஸ்மேக்ஸ் என்ற லைபீரிய கொடி கட்டப்பட்ட கப்பல் மும்பை வந்தது.முன்னதாக ஹார்முஸ் நீரிணையை கடந்த போது கப்பலில் விளக்குகள் முழுவதையும் அணைத்த இந்திய மாலுமி, கப்பலின் நகர்வுகளை கண்காணிக்கும் தானியங்கி அடையாள அமைப்பையும் அணைத்து வைத்துள்ளார் கம்பியில்லா தொடர்பு சாதனமான டிரான்ஸ்பாண்டர்களையும் அணைத்து வைத்ததால் கப்பல் தப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் நிலவி வருகிறது. ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குவதால், பதிலுக்கு ஈரான் இஸ்ரேலையும், வளைகுடா நாடுகளில் அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க வீரர்களின் முகாம்களை குறி வைத்து தாக்கி வருகிறது. இந்த போரில் எண்ணெய் வயல்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த போர் சர்வதேச கடல் வழிப் போக்குவரத்தை பாதித்துள்ளது.

Strait of Hormuz

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான இந்த மோதலால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்க முடியாத நிலை இருக்கிறது.ஏனெனில் இந்த வழியை ஈரான் மூடிவிட்டது. ஆனால் ஷென்லாங் கப்பல் சாமர்த்தியமாக இந்தியாவிற்குள் வந்துள்ளது.

மும்பை வந்தது

இந்தியாவில் தற்போது கேஸ் மற்றும் பெட்ரோல் விவகாரத்தில் இக்கட்டான சூழல் இருக்கிறது. இப்படியான நிலையில் இந்திய மாலுமியின் தலைமையிலான 'ஷென்லாங்' என்ற கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல், வெற்றிகரமாக மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

எப்படி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது

மார்ச் 1-ம் தேதி சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட 'ஷென்லாங்' கப்பல், போர் மேகங்கள் சூழ்ந்த ஹார்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு இந்திய மாலுமி தந்திரமான முடிவை எடுத்தார். கப்பலில் இருந்த கொடியை முதற்கொண்டு வேறு நாட்டு கொடி போல மாற்றி உள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க, கப்பல் தனது அடையாளத்தைக் காட்டும் தொழில்நுட்பக் கருவிகளை அணைத்தார். எதிரிகளின் கண்களில் படாமல் 'மறைந்து' பயணித்தது. 1.35 லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் வந்த இந்த கப்பல், தற்போது மும்பை மஹூல் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான எண்ணெயை வழங்கி உள்ளது.

எப்படி தப்பித்தார்கள்

கடல் பயணத்தில் AIS என்ற தொழில் நுட்பம் மிக முக்கியமானது.ஏனெனில் ஒரு கப்பல் எங்கே இருக்கிறது, அதன் வேகம் என்ன, எந்தத் திசையில் செல்கிறது போன்ற தகவல்களை மற்ற கப்பல்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கும் தானாகவே வழங்கிவிடும். சர்வதேச கடல்சார் அமைப்பின் விதிகளின்படி, இந்தக் கருவி எப்போதுமே செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

எப்போது அனுமதி

எனினம் , போர் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள காலங்களில், கப்பலின் பாதுகாப்பைக் கருதி மாலுமிகள் இதனை அணைத்து வைக்க அனுமதி இருக்கிறது. இது தாக்குதலில் இருந்து தப்பிக்க உதவும். ஆனால் மற்ற கப்பல்களுடன் மோதுவது அல்லது விபத்திற்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது.

எல்லாம் தப்ப முடியவில்லை

'ஷென்லாங்' கப்பல் போலவே அனைத்துக் கப்பல்களும் தப்பிவிடவில்லை. காண்ட்லா துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த 'மயூரி நாரி' என்ற தாய்லாந்து நாட்டுக் கப்பல், ஈரான் படை தாக்கியது. இந்த கோரத் தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர், ஒருவர் காணவில்லை. ஈரானிய கடற்படைத் தளபதி டாங்சிரி இது குறித்துக் கூறுகையில், "எங்கள் அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயலும் எந்தவொரு கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகும்" என எச்சரித்துள்ளார். ஈரானின் எச்சரிக்கையை மீறியதாலேயே மயூரி நாரி கப்பல்கள் தாக்கப்பட்டிருந்தது. எனினும் ஆபத்தை மீறித்தான் இந்திய மாலுமி, ஈரானை ஏமாற்றி 'ஷென்லாங்' கப்பலை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+