சென்னையில் இந்திய பாரம்பரிய மருத்துவ ஏற்றுமதி கருத்தரங்கம்...மார்ச் 13 ல் துவக்கம்
சென்னை : சென்னையில் இந்திய பாரம்பரிய மருத்துவ ஏற்றுமதி கருத்தரங்கம் மார்ச் 13 ம் தேதி நடைபெற உள்ளது.
நம் இந்திய பாரம்பரிய மருத்துவர்கள், மருந்து வகைகள் கொரோனா பேரிடர் காலத்தில் முக்கிய பங்காற்றியது அனைவருக்கும் தெரிந்ததே. பாரம்பரிய இயற்கை மருத்துவ வகைகள் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்துவது நம் கடமையாகும். இந்நிலையில் உலகத் தமிழ் வர்த்தக சங்கம், இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குனரகம், தேசிய சித்த மருத்துவம், மத்திய சித்த ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் வழிகாட்டுதல் படி இந்திய பாரம்பரிய மருத்துவ ஏற்றுமதி கருத்தரங்கம் 'INDIAN TRADITIONAL MEDICINE EXPORT CONFERENCE' (ITMEC) மார்ச் 13ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

நிகழ்வில் மத்திய ஆயுஷ் செயலாளர், மற்றும் வர்த்தக அமைச்சக முதன்மை செயலாளர், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், இந்திய மருத்துவ இயக்குனரகம் போன்றவர்களை அழைத்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி போன்ற மருந்து மற்றும் மருத்துவர்கள் பயனடையும் வகையில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
டெலி மெடிசன்(Tele Medicine), வெல்லனஸ் சென்டர் (Wellness Centre), ஸ்மார்ட் கிளினிக் (Smart Clinic) பாரம்பரிய மருத்துவம் மருத்துவ வகைகளை ஏற்றுமதி, சித்த மருத்துவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு போன்றவைகளை உள்ளடக்கிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு நாட்டு தூதர்கள், துணை தூதர்கள், அம்பாசிடர்கள், வர்த்தக ஆணையாளர்கள், இந்தத் துறையில் முதலீடு செய்ய சிறு முதலீட்டாளர்கள் போன்றவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் தென்னிந்தியாவில் முன்னணி மருந்து நிறுவனங்கள் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அரங்கம் அமைத்து காட்சிப்படுத்த உள்ளன. இந்நிகழ்வில் நம் இந்திய பாரம்பரிய மருந்து வகைகள் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக வாங்கி பயனடையும் வகையில் இந்நிகழ்ச்சியை முன்னெடுக்க உள்ளன என உலகத் தமிழ் வர்த்தக சங்க தலைவர் செல்வகுமார் தெரிவித்தார். இதன் மூலம் பாரத பிரதமரின் கனவு திட்டமான ஆயுஷ் துறை பல்வேறு பரிமாண வளர்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications