இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா.. முதல்வர் ஸ்டாலினுக்கு காதர் மொகிதீன் நேரில் அழைப்பு!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்தித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு பவளவிழா நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

சென்னை தலைமைச் செயலகத்தில் (20-08-2022) சனிக்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில முதன்மைத் துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவரும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி, ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் சந்தித்தனர்.

கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்களின் தேசிய அளவிலான சமய நல்லிணக்கப் பயணமாக 'தேசநேச திருப்பயணம்' மேற்கொண்டு கேரளா, கர்நாடக மாநிலங்களில் பயணம் முடித்து தமிழ்நாட்டுப் பயணத்தை தொடக்கமாக வருகிற செப்டம்பர் 2-ந் தேதி சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் தளபதி மு.கஸ்டாலின் பங்கேற்று வாழ்த்துரை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதே நாளில் தென்மாநில முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்ள திருவனந்தபுரம் செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு, தனது சார்பில், 2 தமிழக அமைச்சர்களை அனுப்பி வைப்பதாக உறுதி கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 75-வது நிறுவன ஆண்டு தினமான 2023 மார்ச் 10-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிற முஸ்லிம் லீக் பவளவிழா நிகழ்ச்சியில் பல்சமய சான்றோர் பெருமக்களுக்கு சமய நல்லிணக்க விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை அன்புடன் ஏற்று முதலமைச்சர் இசைவு தந்துள்ளார்.

மேலும் சமுதாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. எல்லா தகவல்களையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்ட முதல்வர், எல்லாக் கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார் என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications