ஈரான் தாக்குதலால் இந்தியர்களுக்கு ஆபத்து..! வரப்போகும் விளைவுகள் என்ன?
சென்னை: இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலால் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது பற்றி சர்வதேச போர்ச் சூழல் பற்றி நிறையக் கட்டுரைகளை எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்புடனான போரை இஸ்ரேல் தொடங்கியதிலிருந்து இரண்டு தரப்புகளும் இடைவிடாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் ஹமாஸ் ஆதரவு ஹிஸ்புல்லாவை குறிவைத்துத் தாக்கி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர்கள் அழித்து ஒழிக்கப்பட்டனர் என்று இஸ்ரேல் கூறிவருகிறது.

இஸ்ரேல், ஈரான், லெபனான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மேகங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இந்தப் போர் தாக்குதலால் அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இஸ்ரேல் ராணுவம் படை தாக்குதலில் சிக்கி ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரெல்லா கடந்த வாரம் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடர் தாக்குதலில் 250க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதனிடையே கடந்த செவ்வாய்க் கிழமையன்று இஸ்ரேல் மீது ஈரான் 200க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தி திடீர் தாக்குதலை நடத்தியது. ஈரானின் தாக்குதல் சம்பவத்திற்கு ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தப் போர் சூழலால் உலகம் மீண்டும் பீதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? உலக நாடுகளை எந்தளவுக்குப் பாதிக்கும்? இவ்வாறான பல கேள்விகளுக்கு சர்வதேச வெளியுறவுக் கொள்கை, போர் சூழல் பற்றிய நிறையக் கட்டுரைகளை எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்திக் கொண்டு உள்ளது. இதற்கு உறுதுணையாக அமெரிக்காவின் ஆதரவு இருக்கிறது. ஈரானின் எதிர் தாக்குதல் முதல் எதிர்வினையாகவே பார்க்கிறேன். இந்தத் தாக்குதல் பெரும் போராக மாறுமா? அல்லது தடுப்பு நடவடிக்கையாக மட்டுமே என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹிஸ்புல்லா மீது நடந்த தாக்குதல், டமாஸ்கஸ் மீது நடந்த தாக்குதல், காஸா மீது நடத்தப்பட்ட சில தாக்குதல் என எதற்கும் ஒரு எதிர்வினை நடைபெறவே இல்லை.
இதனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை எதிர்த்து கேள்வி கேட்க யாரும் இல்லை. இவர்கள் செய்வது சரிதான் என்ற பார்வையும் உருவானது. ஆனால், இப்போது அந்தப் பார்வையின் மீது ஈரான் பதிலடி தாக்குதல் ஒரு சவாலை விடுத்துள்ளது.
ஈரான் ஆரம்பக் காலத்திலிருந்தே இதைப்போன்ற போர் சவால்களைச் சந்தித்து வந்த பெரும் சக்தி உள்ள நாடாகவே வரலாற்றிலிருந்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான போட்டி பல ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ரீதியாகப் பெரிய இடைவெளி இருக்கிறது. ஆனால், போர் தளவாட தொழில்நுட்பங்கள் ரீதியாகப் பெரிய இடைவெளி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதைத்தான் இப்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் உணர்த்துகின்றது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு சுமுகமான நிரந்தர தீர்வு பற்றிய திட்டங்களை உருவாக்கத் தவறிவிட்டன. தற்போதைக்கு பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்ற அளவோடு நின்றுவிட்டன. இப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதல் அதில் சில பாதிப்புகளை உருவாக்கலாம் என ஒரு அச்சம் நிலவுகிறது. இந்தத் தாக்குதல் அமெரிக்க வலதுசாரிகளின் கையை வலுப்படுத்திவிட்டால், அதன் மூலம் வரப்போகும் பாதிப்பு என்னவாக இருக்கும் என்று பல நாடுகள் அஞ்சுகின்றன.
உலக நாடுகளுக்கான பெட்ரோல் உள்ளிட்ட எரிசக்தி பொருட்கள் ஈரான் போன்ற நாடுகளிலிருந்துதான் கிடைக்கின்றன. ஆகவே, அது முடக்கப்பட்டால் என்ன பாதிப்பை உலகம் சந்திக்க உள்ளது என்ற கவலையும் நிலவுகிறது. இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. உக்ரைன் போரில் கூட இந்தியா ஒரு நிலைப்பாட்டை எடுக்கவே இல்லை.
இந்திய எரிசக்தித் துறை மீது இதனால் ஒரு தாக்கம் ஏற்படலாம். புலம்பெயர்ந்து வேலை செய்துவரும் வாழ்வாதாரம் கூட ஒரு தடுமாற்றத்தைச் சந்திக்கலாம். எந்தப் பக்கம் இருந்து யோசித்தாலும் ஈரான் தாக்குதல் இந்தியாவுக்கு சில பின்னடைவுகளைத்தான் ஏற்படுத்தும்" என்கிறார்.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications