வேர்ல்ட் மேப்லயே இருக்காது.. 4 நாள் கூட பாகிஸ்தான் தாங்காது! இந்தியாவ சீண்டினா..மாஜி கர்னல் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளை கொன்று குவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே முழுமையான போர் வந்தால் நான்கு நாட்கள் கூட பாகிஸ்தானால் தாக்குப் பிடிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார் முன்னாள் ராணுவ லெஃப்ட்நெட் கர்ணன் தியாகராஜன்.

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் நான்கு இலக்குகள், லஷ்கர் - இ - தொய்பாவின் 3இலக்குகள், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இரண்டு தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்களை குறி வைத்து செவ்வாய்க்கிழமை இந்தியாவில் முப்படைகளும் இணைந்து திடீர் தாக்குதல் நடத்தின.

India Operation Sindoor pakistan

அதில் தீவிரவாத முகாம்கள் அளிக்கப்பட்ட நிலையில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்த நிலையில், தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் கொக்கரித்துள்ளார். இந்நிலையில், முழுமையான போர் வந்தால் நான்கு நாட்கள் கூட பாகிஸ்தானால் தாக்குப் பிடிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார் முன்னாள் ராணுவ லெஃப்ட்நெட் கர்ணன் தியாகராஜன்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர்," ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்திருக்கிறது. 25 நிமிடங்களில் தீவிரவாதிகளின் இலக்குகள் தாக்கப்பட்டிருக்கிறது. முப்படைகளும் ஒருங்கிணைந்து இதை சாத்தியமாக்கி இருக்கிறது. தாக்குதலுக்கு ஆளான ஒன்பது இடங்களும் தீவிரவாதிகளின் மையமாக இருந்தது. முழுக்க முழுக்க நமது உளவு அமைப்புகள் கண்காணித்து தீவிரவாதிகள் வசிக்கும் இடத்தை தேர்வு செய்து வைத்திருந்தனர்.

தற்போது சரியான திட்டம் விடல் மூலமாக முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. நாடாளுமன்ற தாக்குதல், பத்தான்கோட் தாக்குதல், புல்வாமா என இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய மசூத் அசார் தப்பினாலும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் பயங்கரவாதிகளில் தளங்கள் இருந்தாலும் அவற்றை மட்டுமே இராணுவம் தகர்த்து இருக்கிறது. பொது மக்கள் யாருமே பாதிக்கப்படவில்லை என்பது சிறப்பானது. குறிப்பாக லஸ்கர் - இ -தொய்பாவின் தலைமையகத்தை இந்தியா குறிவைத்து தாக்கி அழித்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பொதுமக்கள் யாரையும் தாக்கவில்லை. தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை மட்டுமே அளித்துள்ளதன் காரணமாகத் தான் மற்ற நாடுகள் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. உலக நாடுகளை பொறுத்தவரை பாகிஸ்தான் அடிபணிந்து விட்டது. ஆபரேஷன் சிந்தூர் இப்போதைக்கு ஒரு துவக்கம் மட்டுமே. அடுத்தடுத்து இந்தியாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கும். ஒருவேளை இரு நாடுகளுக்கு இடையே நேருக்கு நேர் போர் ஏற்பட்டாலும் கூட பாகிஸ்தானால் நான்கு நாட்கள் கூட தாக்கு பிடிக்காது. தங்களிடம் அணு ஆயுதம் இருக்கும் என பாகிஸ்தான் சொல்லி இருந்தாலும் இந்தியா பதிலடி கொடுத்தால் உலக வரைபடத்தில் இருந்தே பாகிஸ்தான் மறைந்துவிடும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+