மாதவிடாயால் துடித்த மகள்.. ‛பேட்' கேட்டு அலைந்த தந்தை - விமான நிலையத்தில் கண்கலங்க வைத்த சம்பவம்
சென்னை: இண்டிகோ விமானம் ரத்தானதால் விமான நிலையத்தில் காத்திருந்த மகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய் வலியால் மகள் துடித்த நிலையில் ‛‛சிஸ்டர்.. சிஸ்டர்.. என் மகள் மாதவிடாயால் துடிக்கிறாள்.. ‛பேட்' கொடுங்கள்'' என்று தந்தை விமான நிலையத்தில் பணியில் இருந்தவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் சரியான பதிலளிக்காததால் அவர் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 1,000 இண்டிகோ விமானங்கள் ரத்தாகி உள்ளன. இந்த விமானங்கள் ரத்தால் பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் விமான நிலையத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

உடனடியாக மாற்று விமானங்களும் கிடைக்காதது மற்றும் விமான ஊழியர்கள் சரியான பதில் அளிக்காதது உள்ளிட்டவற்றால் பயணிகள் கடும் கோபமடைந்து வாக்குவாதம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான், மகளுக்கு மாதவிடாய் ‛பேட்' கேட்டு தந்தை கெஞ்சும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அதாவது இண்டிகோ விமானம் ரத்தானதால் தந்தை ஒருவர் தனது மகளுடன் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வேளையில் அவரது மகள் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த மகளை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் வழங்கும் இடத்தில் பணியில் உள்ள ஊழியரிடம் சென்று, ‛‛எனது மகள் மாதவிடாயால் துடிக்கிறாள்.. ‛பேட்' கொடுங்கள்'' என்று கேட்கிறார்.
ஆனால் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. அவரை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் அவர் ஆக்ரோஷமாக அங்கிருந்த பெண் ஊழியரை அழைக்கிறார். அவர் பிற பயணிகளிடம் விளக்கம் அளித்து கொண்டிருந்தார். இதனால் அவரும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ஆக்ரோஷமான தந்தை, ‛‛சிஸ்டர்.. சிஸ்டர்.. என் மகள் மாதவிடாயால் துடிக்கிறாள்.. ‛பேட்' கொடுங்கள்'' என்று கேட்கிறார்.
"सिस्टर, मेरी बेटी को सेनेटरी पैड चाहिए…
— अपूर्व اپوروا Apurva Bhardwaj (@grafidon) December 5, 2025
नीचे से ब्लड गिर रहा है।
पिता रो रहा है।
फ़्लाइट टाइम पर नहीं चल रहा है,
सत्ता के नाम पर सट्टा चल रहा है।
अच्छे दिन आ गए…#अमृतकाल चल रहा है.#घोरकलजुग #IndigoDelay pic.twitter.com/J8YjPJB7qh
அந்த பெண் ஊழியராலும் அவருக்கு உதவி செய்ய முடியவில்லை. இதனால் அவர் பதில் எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இதனால் அங்கிருப்பவர்கள் அந்த தந்தைக்கு ஆதரவாக பெண் ஊழியர் உள்பட பிற ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பலரும் இண்டிகோ விமான நிறுவனத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் எந்த விமான நிலையத்தில் நடந்தது என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.
இதற்கிடையே இண்டிகோ விமான நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் இன்று விளக்கமளித்தார். அதில், ‛‛ எங்களின் விமான சேவைகள் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று வரை நிலைமை சரியாகவில்லை. இன்று மட்டும் 1,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ விமான சேவை முழுவதுமாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப 5 முதல் 10 நாட்கள் வரை ஆகும். விமானங்கள் ரத்து மற்றும் காலதாமதம் உள்ளிட்டவற்றுக்கு நானும், இண்டிகோவின் அனைத்து நிர்வாகிகளுடன் பயணிகளிடம் மன்னிப்பு கோருகிறோம்'' என்று கூறியுள்ளார்.
இண்டிகோ இத்தகைய பிரச்சனையை எதிர்கொள்ள முக்கிய காரணம் சமீபத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த பைலட்டுகளுக்காக விமான கடமை நேர வரம்புகள் (FDTL or Flight Duty Time Limitations) தான். இது கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலமாக விமானிகளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கிறது. அதாவது ஒரு விமானியை தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் இரவுப்பணியில் அமர்த்த கூடாது. ஒரு விமானிக்கு ஒவ்வொரு வாரமும் 48 மணிநேரம் ஓய்வு தர வேண்டும் என்பன உள்பட பல விதிகள் உள்ளன.
இதற்கு ஏற்ப அனைத்து விமான நிறுவனங்களும் மாறி வரும் நிலையில் இண்டிகோவால் மாற முடியவில்லை. அதாவது பைலட்டுகளை ரோட்டோஷன் முறையில் பணியமர்த்துவதில் இண்டிகோ தவறியுள்ளது. இதனால் தான் அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இது போதாது என்று தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை உள்ளிட்டவற்றாலும் விமானங்கள் ரத்தாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications