பைலட்டுகள் பற்றாக்குறை.. முடங்கிப்போன இண்டிகோ விமான சேவை.. நாடு முழுதும் பரிதவிக்கும் பயணிகள்
சென்னை: பைலட்டுகள் பற்றாக்குறையால் நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 3வது நாளாக நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் காலதாமதமாக புறப்படுவதோடு, சில விமானங்கள் பைலட்டுகள் இல்லாமல் ரத்தும் செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
நம் நாட்டில் இயங்கி வரும் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. இந்நிலையில் தான் கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனத்தில் பைலட்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2 நாட்களாக இண்டிகோ விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அரசு டேட்டாவின்படி டிசம்பர் 1ம் தேதி 49.5 சதவீத விமானங்கள் தான் சரியான நேரத்துக்கு புறப்பட்டு சென்றனர். இது நேற்று மோசமானது. நேற்றைய தினம் 35 சதவீதம் விமானங்கள் மட்டுமே சரியான நேரத்துக்கு புறப்பட்டு சென்றன.
இன்று 3வது நாளாகவும் இண்டிகோ விமான சேவை சிக்கலை சந்தித்துள்ளது. அதன்படி மும்பை விமான நிலையம், பெங்களூர் விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு செல்கின்றன. மேலும் பல விமானங்களின் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மும்பையை எடுத்து கொண்டால் மும்பை - மாலத்தீவு விமானம் உள்பட பல விமானங்கள் தாமதமாக கிளம்பின. பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தை எடுத்து கொண்டால் பல விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஹைதராபாத்தில் 19 இண்டிகோ விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் விடுமுறையில் உள்ள விமானிகளையும் மீண்டும் பணிக்கு திரும்பி வர நிறுவனம் கடந்த ஒரு வாரமாக அழைத்து வருகிறது. ஆனால் அவர்கள் பணிக்கு மீண்டும் திரும்பவில்லை. அதேபோல் பணியில் உள்ளவர்கள் தங்களின் விடுமுறை சார்ந்த சலுகைகளை விட்டு கொடுக்கும்படி நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஆனால் விமானிகள் அதனை ஏற்கவில்லை. இதனால் பைலட் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது.
திடீரென பைலட்டுகளின் இந்த பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய ரூல்ஸ் தான். அதாவது Stricter rest and duty norms ல் முழுவதுமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் தான் தற்போது பைலட்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications