இண்டிகோ பயணிகளுக்கு நிம்மதி.. சென்னை ஏர்போர்ட்டில் சர்ப்ரைஸ் மாற்றம்.. இனிமேல் பிரச்சனை இருக்காது
சென்னை: நாடு முழுக்க கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இண்டிகோ விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. நிலைமை சீராக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், இப்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. நேற்றைய தினம் 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் ரத்து செய்யப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் மிகப் பெரிய விமானச் சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ இருந்து வந்துள்ளது. முக்கிய நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை எல்லா இடங்களுக்கும் இண்டிகோ விமானச் சேவை கொடுத்து வந்தது. இந்தச் சூழலில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஒரு வாரமாகவே இண்டிகோ நிறுவனத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.

நவம்பர் 1ம் தேதி முதலே ஏகப்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 1500+ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும் கூட 500+ விமானங்கள் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் அளவுக்கு இதனால் நாடு முழுக்க மிக மோசமான ஒரு சூழலே உருவானது.
மத்திய அரசு விமானிகள் மற்றும் விமானக் குழுவுக்கு அறிவித்த புதிய விதிமுறைகளே இதற்குப் பிரதானக் காரணமாகும். நிலைமை மோசமானதால் இந்த விதிமுறைகளில் சிலவற்றை மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதன் பிறகே இண்டிகோ விமானச் சேவை மெல்லச் சீராக ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது.
சென்னை விமான நிலையத்தைப் பொறுத்தவரை நேற்றைய தினம் 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்கள், சென்னைக்கு வரும் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இன்றைய தினம் 14 விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் 14 இண்டிகோ விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்னும் ஓரிரு நாட்களில் விமானச் சேவை மொத்தமாக நார்மல் ஆகும் எனத் தெரிகிறது. இதுவரை விமான ரத்தால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், இனிமேல் அந்தச் சிக்கல் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. மீண்டும் இதுபோன்ற ஒரு சூழல் ஏற்படாமல் இருக்கவும் இண்டிகோ தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றே தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications