அசுத்தமான நாடு இந்தியா என பதிவிட்ட இன்ஸ்டா பிரபலம்.. தக்க பதிலடி கொடுத்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நான் பார்த்த வரையில் உலகிலேயே அசுத்தமான நாடு இந்தியாதான் என்று இன்ஸ்டா பிரபலம் ஒருவர் பதிவிட்டதற்கு நெட்டிசன்கள் தக்க பதிலடியை கொடுத்துள்ளனர். நீங்கள் பாகிஸ்தானை நேசிக்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக இந்தியாவை அவமதிக்காதீர்கள்.. எந்த நாடு சிறந்தது அதன் ஜிடிபி என்ன என்பது பற்றி மொத்த உலகத்திற்கு தெரியும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இங்குள்ள இயற்கைக் காட்சிகளையும், மக்கள் கொடுக்கும் விருந்தோம்பலையும் பார்த்து மெய்சிலிர்த்து தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை அடிக்கடி பார்க்க முடிகிறது.

இந்தியாவை பாராட்டும் வெளிநாட்டினர்
"நான் கேள்விப்பட்ட இந்தியா வேறு... ஆனால் உண்மையில் நான் பார்க்கும் இந்தியா வேறு" என்று வியந்து பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பதிவிடுகிறார்கள். அதேபோல், இந்தியாவில் உள்ள உணவுகள், குறிப்பாக தென்னிந்திய உணவுவகைகளை ருசி பார்த்து, "இப்படி ஒரு டேஸ்டா!" என்று வியந்து பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது.
அதேபோல், இந்தியாவில் மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்றவை மேற்கத்திய நாடுகளை மிஞ்சும் வகையில் இருப்பதாக சில யூடியூப் விலாக்கர்களும், இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்களும் பதிவிடுவார்கள். இதுபோன்ற பதிவுகள் இந்திய நெட்டிசன்கள் மத்தியிலும் வைரலாக பரவி பாராட்டுகளைப் பெறும்.
டேவிட் சிம்ப்சன் பதிவு
இந்த சூழலில், ஐரோப்பிய நாட்டை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான டேவிட் சிம்ப்சன் என்பவர் "இந்தியா போல அசுத்தமான நாட்டை உலகிலேயே பார்த்தது இல்லை" என்று கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டியுள்ளார். இதுபற்றிய விவரங்கள் வருமாறு: டேவிட் சிம்ப்சன் என்ற அந்த இன்ப்ளூயன்சர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டவர்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வந்த அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் பதிவிட்டு வந்தார். அதில், தான் சென்று வந்ததில் மிகவும் ஊழல் மிக்க நாடாக இருப்பது கினியா என்று பதிவிட்டிருந்தார். அதேபோல், ஈராக் தலைநகர் பாக்தாத் தான் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்றும், மணிலா இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
நெட்டிசன்கள் தக்க பதிலடி
அதேபோல், உலகில் மிகவும் அசுத்தமான நாடாக இந்தியாவை குறிப்பிட்ட அவர், அதனுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டிருந்தார். இதுமட்டுமன்றி, இந்தியாவில் விமான நிலையத்தில் அனுபவம் மிக மோசமாக இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியாவில் விமானம் 5 முறை ரத்து செய்யப்பட்டது. அதுவும் ஒரே வாரத்தில். 2025-ல் இப்படி நடக்கிறது" என்று தெரிவித்தார்.
இதற்கு ஒரு நெட்டிசன், "ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த நிகழ்வை இவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது இந்தியாவில் மோசமான வானிலை நிலவிய காலம்" என்று தெரிவித்தார். இந்தியாவை "உலகின் அசுத்தமான நாடு" என்று குறிப்பிட்டடேவிட் சிம்ப்சனுக்கு நெட்டிசன்கள் பலரும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
வியூஸ்க்காக இப்படி காட்டியுள்ளீர்கள்
ஒரு நெட்டிசன் கூறுகையில், "நீங்கள் பாகிஸ்தானை நேசிக்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக இந்தியாவை அவமதிக்காதீர்கள். எந்த நாடு சிறந்தது, அதன் ஜிடிபி என்ன என்பது மொத்த உலகத்திற்கும் தெரியும்" என்று குறிப்பிட்டார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "இந்தியாவில் சிறப்பான இடங்கள் எத்தனையோ உள்ளன. ஆனால், வெறும் வியூஸ்க்காக மோசமான சில இடங்களை மட்டுமே காட்டியுள்ளீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications