வழக்கத்தை விட பாதிப்பு அதிகம்.. 'ஆனால்' புதிய வகை வைரஸ் குறித்து 'எக்ஸ்பர்ட்ஸ்' சொன்ன முக்கிய தகவல்!
தற்போது பரவி வரும் புதிய வகை வைரசால் 2 பேர் உயிரிழந்த சூழலில், இந்த வைரஸ் பரவல் குறித்த பதற்றம் வேண்டாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: இந்தியாவில் இன்புளுயன்சா எச்3என்2 வைரஸ் பரவி வரும் சூழலில், இந்த நோய் பரவல் தொடர்பாக மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே போதும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் தருன் சகானி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், சமீபத்தில் தான் அடங்கியுள்ளது.
இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் பரவலாக வைரஸ் நோய்கள் பரவி வருகிறது. அதிகரித்து வரும் காய்ச்சலால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

எச்3என்2 வைரஸ்
இன்புளுயன்சா எனும் எச்3என்2 வைரஸ் நோய் பரவலால் கடந்த 3 மாதங்களில் மட்டும் நாட்டில் சுமார் 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் கர்நாடக மாநிலத்தில் ஒருவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் பாதிப்பு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலும் கொரோனாவை போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ? என்று மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

காய்ச்சல், சுவாச பிரச்சினை
பன்றிகள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இந்த எச்3என்2 வைரஸ் பரவுகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சுவாசத்தில் பிரச்சினை, உடல் வலி, வாந்தி போன்றவை ஏற்படுகின்றன. இதனால் இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மாநில அரசுகள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

மக்கள் பதற்றமடைய வேண்டாம்
இந்த நிலையில், எச்3என்2த வைரஸ் பரவல் குறித்து மக்கள் பதற்றமடைய வெண்டாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நோய் பரவல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் தருன் சகானி கூறியதாவது:- இன்புளுயன்சா எச்3என்2 வைரஸ் பரவலால் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவை ஏற்படவில்லை.

இப்படி செய்தாலே போதும்...
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 5 சதவீதத்தினரே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். எனவே இது நோய் பரவல் தொடர்பாக மக்கள் பதற்றமடைய வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே போதும். ஒவ்வொரு ஆண்டும் இந்த காலக்கட்டத்தில் இது போன்ற வைரஸ் பரவல் நோய் பரவி வருகிறது இயல்பு தான். எனினும் இந்த ஆண்டு அதன் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications