ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்! இனி எதுக்கும் கவலை இல்லை!
சென்னை: 2025 முழுவதும் ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்திகள்தான் வந்துக்கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் பணி நீக்கங்கள் அதிகரித்திருந்தன. இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது புதிய ஊழியர்களுக்கான சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. குறிப்பாக, ஸ்பெலிஸ்ட் புரோகிராமர் L3 போன்ற சிறப்புத் தொழில்நுட்பப் பதவியில் உள்ள ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ₹21 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இது இந்திய ஐடி நிறுவனங்களிலேயே மிக உயர்ந்த ஆரம்ப நிலை சம்பளமாகும். இது செயற்கை நுண்ணறிவு முதன்மை உத்தியைப் பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

அதாவது செயற்கை நுண்ணறிவை துணை தொழில்நுட்பமாக பார்க்காமல், அடிப்படை தொழில்நுட்பமாக பார்ப்பதைதான் 'செயற்கை நுண்ணறிவு முதன்மை உத்தி' என்று சொல்கிறார்கள். இனி அனைத்து வேலைகளும் ஏஐ துணையுடன் நடக்காது. ஏஐ மூலமாக மட்டுமே நடக்கும். ஏஐ இல்லையெனில் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்.
2025-26ஆம் ஆண்டு பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பட்டதாரிகளுக்காக இன்ஃபோசிஸ் ஒரு வளாகத்திற்கு வெளியே இன்டர்வியூ நடத்துகிறது. பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக், எம்.சி.ஏ மற்றும் கணினி அறிவியல், ஐடி, இசிஇ, இஇஇ போன்ற பிரிவுகளில் ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி பட்டதாரிகளும் இந்த சிறப்புப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Specialist Programmer L3 (பயிற்சி) பதவிக்கு ஆண்டுக்கு ₹21 லட்சமும், L2 (பயிற்சி)க்கு ₹16 லட்சமும், L1 (பயிற்சி)க்கு ₹11 லட்சமும் இன்ஃபோசிஸ் ஊதியமாக வழங்குகிறது. டிஜிட்டல் சிறப்புப் பொறியாளர் (Digital Specialist Engineer - பயிற்சி) பதவிக்கு ஆண்டுக்கு ₹7 லட்சம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் குழு தலைமை HR அதிகாரி ஷாஜி மேத்யூ, இது குறித்த கூறுகையில், "எங்கள் நிறுவனம் அனைத்து சேவைப் பிரிவுகளிலும் 'செயற்கை நுண்ணறிவு முதன்மை' உத்தியை செயல்படுத்தி வருகிறது. இம்முயற்சி தற்போதுள்ள ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதோடு, சிறப்புத் திறன் கொண்ட டிஜிட்டல் திறமையாளர்களை நியமிக்கவும் உதவுகிறது.
எங்கள் ஆரம்பகால பணியமர்த்தல் திட்டங்கள், கேம்பஸ் மற்றும் கேம்பஸுக்கு வெளியே நடைபெறும் தேர்வுகள் இரண்டையும் உள்ளடக்கியது. Specialist Programmer பிரிவின் கீழ் உள்ள வாய்ப்புகளையும் நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம். இதற்கான ஊதியம் ஆண்டுக்கு ₹21 லட்சம் வரை உயர்ந்துள்ளது" என்றார்.
ஐடி நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு ஒப்பிடுகையில், ஆரம்ப நிலை சம்பளம் குறைவாக இருப்பது நீண்டகால விவாதமாக உள்ளது. இருப்பினும், இன்ஃபோசிஸ் 2026 நிதியாண்டின் முதல் பாதியில் 12,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்தியுள்ளது. இந்த ஆண்டுக்கான 20,000 புதிய ஊழியர்களை நியமிக்கும் இலக்கை அடைய நிறுவனம் சரியான பாதையில் செல்கிறது என்று துறைசார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications