வச்சான் பாரு ஆப்பு எனக்கு.. ஐடி துறையே ஆடிப் போச்சு! தினமும் 9.15 மணி நேரம் வேலை.. மிரண்ட ஊழியர்கள்!
சென்னை: உலக அளவில் ஐடி துறை மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏஐ வருகையால் பல ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து வருகின்றனர். இதனால் நிறுவனத்தின் கடும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு பணியாற்றிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தங்கள் ஊழியர்கள் தினமும் 9.15 நிமிடம் மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐடி துறையே ஆட்டம் கண்டது போல் தான் இருக்கிறது. ஏஐ வந்த பிறகு டெக் துறையில் புரட்சி ஏற்பட்டாலும், அது ஊழியர்களை வேலையை காலி செய்து வருவது பலரையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது. எப்போது யார் வேலை போகும் என்பதே தெரியாத அளவுக்கு ஐடி ஊழியர்கள் நிலை உள்ளது.
கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட தனது ஊழியர்களை அடிக்கடி வேலையை விட்டு நீக்கி வருகிறது. ஏஐ வந்து விட்ட பிறகு நாளைக்கு நமது வேலை இருக்குமா? இருக்காதா? என்பது கூட தெரியாமல் பல ஊழியர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இதனை பயன்படுத்திக் கொண்டு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வருவதாக கூறப்படுகிறது. அதிக வேலை அதிக டார்கெட், கூடுதல் வேலை நேரம் ஆகியவை காரணமாக பல ஊழியர்கள் கடும் மன அழுத்தத்தில் பணியாற்றுவதாக லிங்க்டுஇன் வலைதளத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணியாற்ற வேண்டுமென தனித்தனியாக மெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என பேசி இருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கடும் விவாதம் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நாராயண மூர்த்தியின் வலியுறுத்தலை அமல்படுத்தும் வகையில் தற்போது பணி நேர நீட்டிப்பு மெயில் இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. வாரத்தின் ஐந்து நாட்களில் தினமும் 9 மணி நேரம் 15 நிமிடங்கள் வேலை பார்க்க வேண்டும் எனவும், குறிப்பாக வீடுகளில் இருந்து வேலை பார்ப்பவர்கள் கட்டாயம் இந்த நேர கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு மாத இறுதியிலும் அவர்கள் எவ்வளவு நேரம் பணியாற்றினார்கள் என கண்காணிக்கப்பட்டு அந்த தரவுகள் ஹெச்ஆர் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவு அறிவித்திருக்கிறது. தற்போதைய சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் சுமார் மூன்றே கால் லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவருமே தற்போது ஒன்பது மணி நேரம் 15 நிமிடங்கள் பணியாற்ற வேண்டும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இன்போசிஸ் ஊழியர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அலுவலகத்தில் பத்து நாட்கள் பணியாற்றிய வேண்டுமென வற்புறுத்தப்பட்டிருக்கும் நிலையில் தற்போது பணி நேரம் அதிகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சில ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்த்தால் அந்த தரவுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும், ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பணியாற்றுகிறார்கள், மொத்தமாக மாதத்திற்கு எவ்வளவு நேரம் பணியாற்றுகிறார்கள், வீட்டிலிருந்து பணி செய்பவர்கள், தொலைதூரங்களில் பணி செய்பவர்கள் என அனைத்து தரவுகளும் சேகரிக்கப்படும் என இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறி இருக்கிறது. இதனால் பல ஊழியர்கள் மன உளைச்சலில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications