குப்பைமேனி பூத்து கொண்டைக்கு ஆகாது! அது போல் தான் அதிமுகவின் முஸ்லீம் பாசம்! -இனிகோ இருதயராஜ்
சென்னை: "குப்பைமேனி பூத்து கொண்டைக்கு ஆகாது" என்பார்கள், அது போல தான் இஸ்லாமியர்கள் மீதான அதிமுகவின் பாசம் என கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம்கள் மீது பாசத்தை பிழிந்து பிழிந்து ஊற்றினாலும், எடப்பாடி பழனிச்சாமியை துளியளவும் இஸ்லாமிய மக்கள் நம்பப் போவதில்லை எனக் கூறியுள்ளார். அதிமுகவின் முஸ்லீம் பாசம் பற்றி இனிகோ கூறியிருப்பதாவது;

அதிமுகவின் முஸ்லீம் பாசம்: "குப்பைமேனி பூத்து கொண்டைக்கு ஆகாது" என்பார்கள். அதுபோல என்ன தான் இஸ்லாமியர்கள் மீது பாசத்தை பிழிந்து பிழிந்து ஊற்றினாலும் , எடப்பாடி பழனிச்சாமியை துளியளவும் இஸ்லாமிய மக்கள் நம்பப் போவதில்லை. தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளின் தொப்பி தந்திரங்கள் இஸ்லாமியர்களுக்கு நிச்சயம் தெரியும். அதுவும் குறிப்பாக அதிமுகவின் தொப்பித் தந்திரங்களை இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
மறக்கவில்லை: ''அந்த வகையில் தங்கள் சமூகம் மீதான அதிமுகவின் வஞ்சனையை, குரூரத்தை அந்த மக்கள் மறவாமல் நினைவில் வைத்திருக்கிறார்கள். 400 ஆண்டுகால பழமை வாய்ந்த பாபர் மசூதி, மதவாத பாஜக ரவுடிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட போது அதற்கு ஆதரவு தெரிவித்த ஜெயலலிதாவை முஸ்லீம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. தேசிய ஒருமைப்பாட்டு கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என முழங்கிய ஜெயலலிதாவை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.''
பாபர் மசூதி: ''பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்கப்ட்டப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதாவையும், எடப்பாடி பழனிச்சாமியையும் முஸ்லீம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. சிறுபான்மை மக்களுக்கு எதிரான, தேசிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மக்களவையில் அதிமுக முழங்கியதை முஸ்லீம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.''
பின்லேடன் படம்: ''தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வந்த போது, அதை ஏற்காத எடப்பாடி பழனிச்சாமியை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பின்லேடன் படத்தை கொண்டு வந்தார்கள் என்று இஸ்லாமிய மக்களை குற்றம் சாட்டிய அதிமுகவை முஸ்லீம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் போராடியவர்கள் மீது கொடூரமாக தாக்கி வழக்குகளை பதிவிட உத்தரவிட்ட எடப்பாடி பழனிச்சாமியை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.''
கொரோனாவை பரப்பியது முஸ்லிம்கள்: ''கொரோனாவை பரப்பியது முஸ்லிம்கள் தான் என பொய் பேசிய எடப்பாடி அரசாங்கத்து ஆட்சியாளர்களை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய சகோதரர்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.''
வலி தீராது: ''இஸ்லாமிய மாணவர்கள் படித்து முன்னேற அரசாங்கம் வழங்கிய கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்திய போது, வாய் திறக்காத எடப்பாடியை முஸ்லிம் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.இப்படி இஸ்லாமிய மக்களின் நினைவுகளில் அதிமுகவும், எடப்பாடி பழனிச்சாமியும் ஏற்படுத்திய வலி எத்தனை காலமானாலும் தீராது. 2024 ஆம் ஆண்டு அந்த காயம், எடப்பாடி பழனிச்சாமியை பழிவாங்காமல் ஆறாது.''
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications