ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க திட்டம்? ‘சபதம்’ எடுத்த பாம் சரவணன்.. உளவுத்துறையின் ‘அலர்ட்’ மெசேஜ்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க, தலைமறைவாக உள்ள அவரது ஆதரவாளரான பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016ஆம் கொல்லப்பட்ட தென்னரசுவின் அண்ணன் தான் இந்த பாம் சரவணன்.
A+ ரவுடிகள் பட்டியலில் இருப்பவர் பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சி வட சென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசு 2016ம் ஆண்டு, ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இறந்த தென்னரசுவின் சகோதரர்தான் பாம் சரவணன்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மாதவரம் ரெட்டேரி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் செல்லும்போது ரவுடி திருவேங்கடம் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அஞ்சலை உள்ளிட்டோர் கைது: இதையடுத்து நடந்த தொடர் விசாரணையில் இந்த வழக்கில் மேலும் மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான பெண் தாதா மலர்க்கொடி, மற்றொரு வழக்கறிஞரும் தமாகா நிர்வாகியாக இருந்தவருமான ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆற்காடு சுரேஷின் தோழியும், பெண் தாதாவுமான புளியந்தோப்பு அஞ்சலை சம்பந்தப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அஞ்சலையை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ஓட்டேரி பகுதியில் பதுங்கி இருந்த அஞ்சலையை கைது செய்த தனிப்படை போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஷாக் தகவல்கள்: அஞ்சலையிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காகவே தான் பண உதவி செய்ததாக அஞ்சலை வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததுடன் தங்குமிடமும் ஏற்பாடு செய்ததாக அஞ்சலை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அஞ்சலை வங்கி கணக்குகளின் விவரங்களை எடுத்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 16 வது நபராக ஹரிதரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்ஃபோன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
உளவுப் பிரிவு எச்சரிக்கை: இதற்கிடையே, உளவுத்துறை, போலீசாருக்கு ஒரு எச்சரிக்கை மெசேஜை அனுப்பியுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. அதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க, தலைமறைவாக உள்ள அவரது ஆதரவாளரான பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாம் சரவணன்: ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சி வடசென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசு கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இறந்த தென்னரசுவின் சகோதரர்தான் பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் மீது மிகுந்த அன்பு கொண்டவர். A+ குற்றப் பின்னணி கொண்ட பட்டியலில் இருப்பவர். 5 கொலை வழக்குகள் சரவணன் மீது உள்ளன.
வெடிகுண்டு வீச்சு, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தொடர் குற்றங்களை கட்டுப்படுத்தும் விதமாக இதுவரை 5 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
பாம் சரவணனின் மனைவி பாஜகவில்: சென்னையைக் கலக்கிய பிரபல தாதா காது குத்து ரவி, குன்றத்தூர் வைரம், காக்கு வீரன் போன்றோரின் நெருங்கிய கூட்டாளி. கொலை மற்றும் கொலை முயற்சிகளின் போது வெடிகுண்டு வீசுவதில் கை தேர்ந்தவர் என்பதால் பாம் சரவணன் என்று ரவுடிகள் வட்டாரத்தில் அழைக்கப்பட்டு அதுவே பட்டப்பெயரானது. பாம் சரவணனின் மனைவி பாஜகவில் பொறுப்பில் உள்ளார்.
தென்னரசு மற்றும் பாம் சரவணனின் இன்னொரு சகோதரரான மாரி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடலை பார்க்க சென்றபோது கதறி அழுதுள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாரி உயிரிழந்தார்.
பாம் சரவணன் சபதம்?: ஏற்கனவே ஆற்காடு சுரேஷ் கொலையில் பாம் சரவணன் உள்ளிட்டோர் தான் சம்பவம் செய்ததாக கூறப்படும் நிலையில், தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க, ஆற்காடு சுரேஷ் தரப்பினரை மொத்தமாக காலி செய்ய பாம் சரவணன் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை சந்தேகிக்கிறது. இதன் காரணமாக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications