உளவுத்துறை எச்சரிக்கை... தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு... தீவிர கண்காணிப்பு
சென்னை: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தீவிர சோதனைக்கு பிறகே, பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தீவிரவாத அச்சுறுத்தல்களும் வெடிகுண்டு மிரட்டல்களும் தொடரும் நிலையில், ரயில்வே போலீசார் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ரயில்வே காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக ரயில்வே போலீசார், தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவும், தீவிர சோதனைகளை மேற்கொள்ளவும், ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இலங்கையிலிருந்து வரும் பயணிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு வெளியே அனுப்பப்படுகின்றனர். இலங்கை பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தமிழகத்திலும் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications