தொடரும் நீயா? நானா? ஆட்டம்.. அதிமுகவில் இருந்து மேலும் இருவர் நீக்கம்.. இபிஎஸ் அதிரடி!
சென்னை: அதிமுகவில் இருந்து மேலும் இரண்டு நிர்வாகிகளை நீக்கி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. இதனிடையே ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ், வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம்
இதனைத்தொடர்ந்து அதிமுகவின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக கூறி
ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் 2 பேர் உள்பட 18 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் அதிமுகவில் நடந்து வரும் அதிகார மோதல் காரணமாக மாநில அளவில் மட்டுமல்ல மாவட்ட அளவிலும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மீண்டும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 21 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் பதிலடி
இதற்கு பதிலடியாக ஓ.பன்னீர் செல்வமும் கட்சியில் இருந்து 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். இப்படி இருவரும் போட்டிபோட்டு நிர்வாகிகள் நீக்கம் என்று அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவில் இருந்து மேலும் இரண்டு பேரை இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அதிரடியாக நீக்கியுள்ளார்.

இபிஎஸ் அதிரடி
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் அமலன் சாம்ராஜ், மருத்துவ அணி இணைச்செயலாளர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறிக்க முழு மூச்சில் இறங்கி இருக்கிறார். இதற்காக நாளை சென்னையில் அடையாறு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் 62 எம்எல்ஏக்களிடம் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தில் கையெழுத்து வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன செய்வார் ஓபிஎஸ்
மறுபக்கம் ஓ.பன்னீர் செல்வம் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இதனால் ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications