சம வேலைக்கு சம ஊதியம்.. சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய இடை நிலை ஆசிரியர்கள் கைது
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினர். திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
சம வேலைக்கு சம ஊதியம் தரப்படும் என்ற வாக்குறுதியை திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்திருந்தது. தேர்தல் வாக்குறுதி 311 ஆக இந்த வாக்குறுதியை திமுக அளித்த நிலையில், ஐந்து ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 2-வது நாளாக சென்னையில் கூடிய அவர்கள் எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
குண்டுக்கட்டாக கைது
பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரி அலுவலக நுழைவுவாயில் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இடைநிலை ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பேருந்துகளில் வலுக்கட்டாயமாக ஏற்றினர்.
இதற்கு மத்தியில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை ஏற்க ஆசிரியர்கள் மறுத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். ஒரு சில ஆசிரியர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை தரதரவென இழுத்துச் சென்ற நிகழ்வும் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
இதனால் போலீசாருடன் ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டித்து கோஷமும் எழுப்பினர். போராட்டத்தின் போது சில ஆசிரியைகள் மயக்கமும் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 3 மணி அளவில் முடிவடைந்தது. போராட்டத்தில் பங்கேற்ற 1,300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமும் எழுப்பினர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பாணையின்படி
"நீதி வேண்டும்.. நீதி வேண்டும்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பாணையின் படி நீதி வேண்டும்" என்ற பதாகைகளையும் வைத்திருந்தனர். 2009 ஆம் ஆண்டு மே 31 வரை நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 8,370 ரூபாயும், அதே ஆண்டு ஜூன் 1 அன்று நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 5,200 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை சம்பளம் 3 ஆயிரத்திற்கும் மேல் வேறுபடுகிறது. ஒரே வேலை, ஒரே தகுதி இருந்தும் சம்பள வித்தியாசம் 16 ஆயிரம் வரை ஏற்பட்டுள்ளது. எனவே, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடுவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications