காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த பூசல்.. “ஜோதிமணி பதிவை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்” - செல்வப்பெருந்தகை
சென்னை: "காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிவை கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கரூர் தேர்தல் படிவம், முகவர் நியமனம் உள்ளிட்டவற்றில் பிரச்சனை இருந்து வந்தது உண்மைதான். சகோதரி ஜோதிமணியின் புகார் குறித்து ஏற்கெனவே மேலிடத்திற்கு தெரியப்படுத்தி உள்ளேன் மேலிடத்தில் இருந்து இன்னும் பதில் வராத நிலையில் ஜோதிமணி பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டி பதிவிட்டது ஆச்சரியமளிக்கிறது." என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் பூசல்கள் வலுத்து வருகின்றன. திமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த காங்கிரஸ் கட்சி குழு அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், திமுகவை விமர்சித்து வருகின்றனர். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று பேசி வருகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இதனால் இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற குரலும் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ளது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. "ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது" என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். ஜோதிமணியின் இந்த பதிவு காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிவை கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கரூர் தேர்தல் படிவம், முகவர் நியமனம் உள்ளிட்டவற்றில் பிரச்சனை இருந்து வந்தது உண்மைதான். சகோதரி ஜோதிமணியின் புகார் குறித்து ஏற்கெனவே மேலிடத்திற்கு தெரியப்படுத்தி உள்ளேன் மேலிடத்தில் இருந்து இன்னும் பதில் வராத நிலையில் ஜோதிமணி பதிவிட்டது ஆச்சரியமளிக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கரூர் எம்.பி ஜோதிமணி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.
தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சனைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.
தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத, ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது. எதையாவது செய்து மக்கள் உணர்வுகளைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக்கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.
தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது. ராகுல் காந்தியின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும்,ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு, காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மானம், மரியாதை இருக்கா.. ஸ்ரீநிதி நாயுடுவை கிழித்த காங்கிரஸ் கவுன்சிலர்.. ஜோதிமணி ஹேப்பியாமே -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications