தவெகவில் செங்கோட்டையனுக்கு மனக்கசப்பா? பொதுச்செயலாளர் ஆனந்த் அளித்த விளக்கம்!
சென்னை: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் மேலும் சில முக்கிய தலைவர்களை கொண்டு வருவார் என்று, விஜய் எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால் அப்படி எதுவும் நடக்காததால், செங்கோட்டையன் மீது விஜய் அப்செட்டில் இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், இது உண்மை இல்லை என்று பொதுச்செயலாளர் ஆனந்த் மறுத்துள்ளார்.
நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். தவெக தலைவர் விஜய்யின் கீழ் அனைவரும் தொண்டர்தான். செங்கோட்டையனுக்கு எந்த மனக்கசப்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்று, குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் செங்கோட்டையன். இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி 10 நாட்களுக்கு முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 10 நாட்களுக்கு மேல்.. பல நாட்கள் கடந்துவிட்டது. இது குறித்து கேட்டதற்கு கால அவகாசம் எல்லாம் எதுவும் கொடுக்கவில்லையே என்று சமாளித்தார். இருப்பினும் இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்த எடப்பாடி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையனை நீக்கினார்.
இதனையடுத்தும் எடப்பாடிக்கு எதிராக தொடர்ந்து செங்கோட்டையன் பேசி வந்த நிலையில், கட்சியிலிருந்தே செங்கோட்டையனையும், அவரது ஆதரவாளர்களையும் எடப்பாடி நீக்கினார்.
இப்படி நீக்கப்பட்ட செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அங்கு அவருக்கு டீசண்டான பதவி வழங்கியது. அதாவது தவெகவின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
செங்கோட்டையனை கட்சிக்குள் கொண்டு வந்ததற்கு சில காரணங்கள் இருந்தன. அதிமுகவில், அதிமுக தொண்டர் மீட்பு கழகம் போன்றவற்றில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை தங்கள் பங்கம் கொண்டுவர செங்கோட்டையன் உதவுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், மருது அழகராஜ் உள்ளிட்டோர் திமுகவுக்கு தாவினர். இதனால் தவெக தலைமை, குறிப்பாக விஜய் அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
இதன் வெளிப்பாடாகத்தான் செங்கோட்டையனுக்கு தவெக தேர்தல் பிரச்சாரக்குழுவில் மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. தேர்தல் பிரச்சார குழுவில் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன், ஏ.பார்த்திபன் என பெயர்கள் வெளியானது. இதில் செங்கோட்டையனின் பெயர் 3வது இடத்தில் இருந்தது, அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் செங்கோட்டையன் மனக்கசப்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இப்படி இருக்கையில்தான் செங்கோட்டையன் அப்செட்டில் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்று பொதுச்செயலாளர் ஆனந்த் மறுத்துள்ளார்.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications