சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக ரேஷன் கடைகளுக்கு பொருள் வாங்கும் போது ஆத்திர அவசரத்திற்கு இணையதளமும் கிடைக்கும்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசு பி.எம்.வாணி எனும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி இணையதள சேவை வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ரேஷன் கார்டுதாரர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு 2 கி.மீ. தூரத்திற்குள் அமைந்திருக்கிறது. இதனால் பி.எம்.வாணி திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆராயப்படுகிறது.

 கொஞ்சம் பொறுங்கள்.. ரேஷன் கடைகள் எல்லாம் மாடர்ன் கடைகளாக மாறும்..! அடித்து சொல்லும் ராதாகிருஷ்ணன் கொஞ்சம் பொறுங்கள்.. ரேஷன் கடைகள் எல்லாம் மாடர்ன் கடைகளாக மாறும்..! அடித்து சொல்லும் ராதாகிருஷ்ணன்

அறிக்கை

அறிக்கை

இவற்றை ஆராய்ந்து அறிக்கை தருமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு மே மாதம் கூட்டுறவு துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதையடுதது ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் வைஃபை வசதி ஏற்படுத்தி அந்த கடைக்கு அருகில் வசிப்போருக்கு இணையதள சேவை வழங்கப்படவுள்ளது.

மொபைல் எண்

மொபைல் எண்

அங்கு மொபைல் போனையோ லேப்டாப்பையோ டேப்லட்டையோ எடுத்து வந்து இணையதள சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக ரேஷன் கடைகளுக்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக இன்டரநெட் பயன்படுத்துவோர் செலுத்த வேண்டும். இதனால் ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாயும் கிடைககும்.

டவுன்லோடு

டவுன்லோடு

அதிக இடவசதியுடன் சொந்த கட்டடங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில இந்த திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவுத துறை ஆயத்தமாகி வருகிறது. பிஎம் வாணி திட்டம் ரயில் டெல் திட்டம் மூலம் 100 ரயில்நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுளளது. இந்த வைபை நெட்வொர்க்கை பயன்படுத்த Wi-DOT எனும் செயலியை டவுன்லோடு செய்து கொள்ள வேணடும்.

பி எம் வாணி

பி எம் வாணி

ஒவ்வொரு முறையும் பொது இடங்களில் பி எம் வாணி வைபை திட்டத்தை பயன்படுத்தும் போது ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய கேஒய்சி கேட்கப்படும். இந்த திட்டத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக கூடிய பாஸ்வேர்டு திட்டம் தவிர்க்கப்படுகிறது. ஏற்கெனவே ரயில் டெல் வைபை திட்டம் நாடு முழுவதும் 6,102 ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Internet facilities will be provided by Tamilnadu Ration shops. This scheme will be introduced soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X