மாதம் ரூ.500 போதும்.. பல லட்சங்கள் கிடைக்கும்.. போஸ்ட் ஆபீஸின் இந்த 3 திட்டம் பற்றி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாதுகாப்பான முதலீட்டில் நல்ல வட்டியுடன் முதிர்வு தொகையை அளிக்க கூடிய பல திட்டங்களை மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது. குறைந்த முதலீடு கொண்ட சில திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

சேமிப்பு பழக்கம் என்பது வளமான எதிர்கால வாழ்க்கைக்கு போடும் முதல் அடித்தளம் ஆகும். ஆனால் நாம் பணத்தை முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதேவேளையில் நல்ல வட்டியுடன் திரும்ப கிடைக்க வேண்டும் என்று நினைப்போம். வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது அதிக ஆபத்து இல்லாத முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

post office central govt savings scheme

சேமிப்பு திட்டங்கள்: எனினும், அதனைவிட போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது, கூடுதல் பலன் தருகிறது. போஸ்ட் ஆபீஸ் பல சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. குறைந்தபட்சம் மாதம் ரூ. 500-ல் இருந்து சேமித்தால் கூட கை நிறைய பணத்தை ரிட்டன் தரக்கூடிய சில திட்டங்கள் உள்ளன. அது அற்றி இங்கே பார்க்கலாம்.

பிபிஎப்: அமைப்பு சாரா தொழிலாளர்கள், சொந்தமாக சிறு சிறு தொழில்களில் ஈடுபடுபவர்கள், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு கூட அவர்களின் ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. public provident fund எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் 1968 ஆம் ஆண்டு மத்திய அரசால் துவங்கப்பட்டது. போஸ்ட் ஆபீஸ், வங்கிகளில் இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

15 ஆண்டுகள் இதன் முதிர்வு காலம் ஆகும். இதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். மாதம் ரூ. 500 முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும். தற்போது 7.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மாதம் ரூ. 500 டெபாசிட் செய்தால் 15 வருடத்திற்கு பிறகு ரூ. 1,62,728- ஆயிரம் கிடைக்கும். கூடுதலாக 5 ஆண்டுகள் நீட்டித்தால் ரூ. 2 லட்சத்து 66 ஆயிரத்து 332-ம், 25 ஆண்டுகள் வரை நீட்டித்தால் ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 321-ம் கிடைக்கும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்: நீங்கள் பெண் குழந்தையின் தந்தையாக இருந்தால், உங்கள் மகளின் எதிர்கால வாழ்க்கைக்காக இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்ய முடியும். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு ரூ.8.2 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது.

15 ஆண்டுகள் நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். 21 வயது ஆன பிறகு முதிர்வு பணத்தை எடுக்கலாம். மாதம் ரூ. 500 இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் நீங்கள் செய்யும் முதலீடு ரூ.90 ஆயிரமாக இருக்கும். 8.2 சதவிகித வட்டியுடன் 21 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்து 103 கிடைக்கும்.

ஆர்டி திட்டம்: போஸ்ட் ஆபிசின் ஆர்டி திட்டமும் மிகச்சிறந்த சிறு சேமிப்பு திட்டமாக உள்ளது. வங்கி ஆர்டி திட்டம் போலவே இதிலும் நீங்கள் குறிபிட்ட தொகையை மாதம் சேமிக்க வேண்டும். பணத்தை கையில் வைத்தால் செலவு ஆகிவிடுகிறது. எதாவது பயனுள்ள வகையில் கொஞ்சமாவது சேமிக்க வெண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ஆர்டி திட்டம் பயனுள்ளதாக உள்ளது. இந்த ஆர்டி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.100 முதல் சேமிக்கலாம்.

ஆர்டி கணக்கை தொடங்கிய பிறகு 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். தற்போது 6.7 சதவிகித வட்டி வழங்கப்படுகிரது. மாதம் ரூ. 500 நீங்கள் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் நீங்கள் செலுத்திய பணம் ரூ.30 ஆயிரமாக இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ.35,681 ஆக இருக்கும். அதாவது 6.7 சதவிகித வட்டியுடன் கிடைக்கும். வட்டி தொகையாக உங்களுக்கு 5,681 ரூபாய் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+