தினமும் ₹50 போதும்.. கையில் ₹35 லட்சம்! போஸ்ட் ஆபீஸின் இந்த சூப்பர் திட்டம் பற்றித் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அஞ்சல் துறை, பொதுமக்களுக்கு நம்பகமான பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் கிராமப்புற மக்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டம் குறிப்பிடத்தக்கது. ,இந்த திட்டம் எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு பலனையும், நிம்மதியையும் தருகிறது என்பதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

இந்த திட்டம் 1995ல் தொடங்கப்பட்ட கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. ஏழைகள், பெண்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பும், காப்பீட்டு விழிப்புணர்வும் வளர்ப்பதே இதன் முக்கிய குறிக்கோள்.

Gram suraksha yojana scheme post office savings

இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு நம்பகமான சேமிப்பின் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் உறுதிப்பத்திர தன்மைகள் இந்த திட்டத்தில் முற்றிலும் உணரப்படுகிறது.

வெறும் 50 ரூபாய் முதலீடு

கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் ஒருவர் தினம் ரூ.50 முதலீட்டு மூலம் தொடங்கலாம். இதன் மூலம் மாதத்திற்கு ரூ.1,500 வரை முதலீடு செய்யலாம். இந்தச் சிறிய முதலீட்டின் மூலம், முதிர்வு காலத்தில் முதலீட்டாளர் 55 வருட முதலீட்டில் ரூ.31.6 லட்சம், 58 வருடத்தில் ரூ.33.4 லட்சம், 60 வருட முதிர்வு காலத்தில் ரூ.34.6 லட்சம் வரை பெற முடியும். முதிர்வு வயது 80, முதிர்வு இலக்கு தொகையை முதன்மையாக வழங்கும் விதத்தில் திட்டம் அமைந்துள்ளது.

இத்திட்டத்தில் இணையக் கூடியவர்கள் 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச காப்பீடு தொகை ரூ.10,000 மற்றும் அதிகபட்சம் ரூ.10 லட்சம். இந்த திட்டத்தில் பிரீமியம் செலுத்தும் விருப்பம் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் இருக்கலாம். முதலீட்டாளர் விரும்பும் கட்டண முறையை தேர்வு செய்தால் அதன்படி பிரீமியம் செலுத்த முடியும்.

முதலீட்டாளர்கள் - கடன் போனஸ் திட்டம்

கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டத்தில் கடன் வசதியும் உண்டு. முதலீட்டின் முதல் 4 ஆண்டுகள் கடன் வசதி கிடையாது; ஆனால் அதற்குப் பிறகு தேவையெனில் முதலீட்டாளர் திட்டத்தில் சேமித்த தொகையின் ஒரு பகுதியை கடனாகக் கேட்கலாம். இதன்மூலம் அவசரச் செலவுகள் மற்றும் தேவைகள் நேர்ந்தால் நிதியுதவி கிடைக்கிறது.

மேலும், இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு போனஸ் வழங்கப்படுகிறது. போனஸ் திட்டத்தில் முதலில் முதலீடு செய்தோர், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே திட்டத்தை நிறுத்தினால் அல்லது பிரீமியம் செலுத்தவில்லை என்றால் போனஸ் தொகை வழங்கப்படாது.


பாலிசிதாரர்களுக்கு சூப்பர் திட்டம்

முதலீட்டாளர்கள் 59 வயது வரை எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். இதில், பிரீமியம் செலுத்துதல் நிறுத்தப்பட்ட தேதி அல்லது முதிர்வு தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் மாற்ற முடியும். பாலிசி தொடங்கிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே சரண்டர் செய்யலாம். சரண்டர் செய்தால் குறைந்த காப்பீடு தொகை மற்றும் அதற்கேற்ப சதவீதம் மட்டுமே கிடைக்கும். முதிர்வு ஒரு வருடத்திற்குள் அல்லது பிரீமியம் நிறுத்தப்பட்டால் போனஸ் வழங்கப்படாது.

நம்பகமான சேமிப்பு திட்டம்

இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு எதிர்கால நிதி பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. குறுகிய முதலீட்டிலும் அதிக லாபம் வழங்கும் இந்த திட்டம் கிராமங்களில் மிகவும் பிரபலமானதாக விளங்குகிறது. நம்பகமான சேமிப்பு, முதலீட்டு பாதுகாப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் மற்றும் கடன் வசதிகள் இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. கிராமப்புற மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் செயல்படும் கிராம சுரக்‌ஷா யோஜனா, அஞ்சலக காப்பீட்டு திட்டங்களில் மிகவும் பிரபலமானது மற்றும் நம்பகமானதாக விளங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+