திருவொற்றியூர் பள்ளியில் மாணவிகளை தாக்கிய வாயு கசிவு! காரணம் என்ன? ஆய்வு நிறைவு!
சென்னை: வடசென்னை திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு தற்போது நிறைவடைந்திருக்கிறது.
வடசென்னையில் வாழும் மக்கள் வாயு கசிவு குறித்து மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் எண்ணூரில் வாயு கசிவு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த வாயு கசிவு காரணமாக முதியோர், நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கண் எரிச்சல், மூச்சு திணறல் என பலரும் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தனர். விசாரணையில் அமோனியா கசிவு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தற்போது திருவொற்றியூர் தனியார் பள்ளியிலும் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி ஏற்பட்ட இந்த வாயு கசிவு காரணமாக 4 மாணவிகள் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தனர். இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். மீண்டும் மீண்டும் இதேபோல சம்பவம் நடந்ததையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை விடுக்கப்பட்டிருக்கிறது.
மொத்தமாக இந்த சம்பவத்தில் 35க்கும் அதிகமான மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வாயு கசிவு எங்கிருந்து ஏற்பட்டது? பள்ளி நிர்வாகம் ஏன் இதை சரியாக கையாளவில்லை என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகையில், "காலை சுமார் 10.30 மணியளவில் வகுப்பறையில் அனைவருக்கும் இருமல் ஏற்பட்டது. ஒருவர் இருவர் எனில் வழக்கமான இருமல் என்று நினைக்கலாம்.. ஆனால் ஒரே நேரத்தில் அனைவருக்கும் இருமல் ஏற்பட்டது சந்தேகத்தை கிளப்பியது. ஆனாலும் கூட என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. கொஞ்ச நேரத்திலேயே அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. நாங்கள் உடனடியாக வகுப்பறையில் இருந்து வெளியேறினோம்.
சில மாணவிகள் மூச்சு திணறலால் கடுமையாக அவதிப்பட்டனர். அதில் ஓரிரு மாணவிகளுக்கு வலிப்பு ஏற்பட்டது. நான் உட்பட பல மாணவிகள் மூச்சுவிடவே கடுமையாக சிரமம் அடைந்தோம். பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து உடனடியாக அவர்களது பெற்றோருக்கு போன் செய்யப்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து அதன் மூலம் மாணவிகளை மருத்துவமனையில் அனுமதித்தது. எங்களுக்கும் முதலுதவி செய்யப்பட்டது" என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற காற்று தர ஆய்வு முடிவு குறித்து அறிக்கையை தயார் செய்கிறது மாசுக் கட்டுபாட்டு வாரியம். பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் திங்கட்கிழமை பள்ளி திறக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications