கேஸ் சிலிண்டர் டெலிவரி மெசேஜுடன் புதிய தகவலை முதல் முறையாக சொன்ன ஐஓசி! இதுவரை இப்படி வந்ததே இல்லையே!
சென்னை: கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆனதாக வரும் எஸ்எம்எஸ் மெசேஜுடன் புதியதாக ஒரு தகவலையும் ஐஓசி தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் புதியதாக இருக்கிறது.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், தற்போது தமிழகத்தின் சமையலறைகளையும் எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் இந்தப் பதற்றம் காரணமாகச் சமையல் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது எரிவாயு தேவையில் பெரும் பகுதியை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. தற்போது ஈரான் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கியக் கடல் வழிப் பாதைகளில் கப்பல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்கு வர வேண்டிய எல்.பி.ஜி சரக்குக் கப்பல்கள் தாமதமாவதே இந்தத் தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணமாக மாறியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வழக்கமாக 2 நாட்களில் கிடைக்கும் சிலிண்டர்கள், தற்போது 10 முதல் 12 நாட்களாகியும் வருவதில்லை. எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான டெர்மினல்களுக்கு வந்து சேர வேண்டிய எரிவாயுவின் அளவு குறைந்ததால், சிலிண்டர் நிரப்பும் மையங்கள் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருகின்றன.
தட்டுப்பாடு ஒருபுறம் இருக்க, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது வரும் காலங்களில் சமையல் எரிவாயு விலையை மேலும் உயர்த்தக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அது போல் சமையல் எண்ணெய்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்தவர்களுக்கு டெலிவரி கிடைத்துள்ளது. அதாவது கடந்த 9ஆம் தேதி இண்டேன் சிலிண்டர் புக் செய்தவர்களுக்கு 13 ஆம் தேதியான நேற்று சிலிண்டர் டெலிவரி ஆகியுள்ளது.
இது தொடர்பாக சிலிண்டர் டெலிவரி மெசேஜுடன் ஒரு புதிய தகவலையும் தெரிவித்துள்ளது. Your Order is delivered with invoice no. 5-106090030233. Next available booking date is 08-Apr-2026, INDANE என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 13 ஆம் தேதி சிலிண்டர் டெலிவரியானதால் 25 நாட்கள் என கணக்கிட்டு இத்துடன் ஏப்ரல் 8ஆம் தேதி புக் செய்யுமாறு குறிப்பிட்டுள்ளது. ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்து டெலிவரி பெற்ற பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய 21 நாட்கள் இடைவெளி இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது.
ஆனால், தற்போது நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த கால இடைவெளி 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு சிலிண்டர் உங்கள் வீட்டிற்கு வந்த தேதியிலிருந்து 25 நாட்கள் கழித்தே அடுத்த சிலிண்டருக்கான பதிவை நீங்கள் செய்ய முடியும். சிலிண்டரை வாங்கிக் கொண்டு மீண்டும் புக்கிங் செய்ய முடியவில்லை என மக்கள் புகார் அளிப்பார்கள் என்பதற்காகவே அடுத்த புக்கிங் தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications