திருமணமான பெண்களுக்கு வேலை இல்லை? பெரிதாக வெடித்த சர்ச்சை.. ஃபாக்ஸ்கான் நிறுவனம் பரபர விளக்கம்
சென்னை: சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் திருமணமான பெண்கள் வேலைக்கு எடுக்கப்படுவதில்லை என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதுபோல பாலின ரீதியாகப் பாகுபாடு காட்டக்கூடாது என்ற விதி இருக்கும் நிலையில், இது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் மிக முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐபோன்கள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குப் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிறுவனத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும் திருமணமான பெண்கள் வேலைக்கு எடுக்கப்படுவதில்லை என்றும் புகார் சமீபத்தில் எழுந்தது.
ஐபோன்கள்: இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆப்பிள் ஐபோன்களை தயாரித்துத் தரும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் மிக முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது. அதாவது தங்கள் நிறுவனத்தில் வேலை செய்வோரில் 25 சதவீதம் பேர் திருமணமான பெண்கள் என்று கூறியுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதியே பாலினம் மற்றும் மதம் பாராமல் அனைத்து ஊழியர்களும் உடலில் எந்தவொரு உலோகத்தையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்ற விதியை கொண்டு வந்துள்ளதாகவும் அது பாரபட்சமானது இல்லை என்றும் அரசுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சமீபத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் திருமணமான பெண்களை வேலைக்கு எடுக்கவில்லை என்ற தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பான விளக்கத்தை அந்த நிறுவனம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. தங்கள் நிறுவனத்தில் இதுபோன்ற பாலிசி எதுவும் இல்லை என்றும் வேலைக்குத் தேர்வாகாத நபர்கள் இதுபோன்ற செய்திகளைப் பரப்பி இருக்கலாம் என்றும் ஃபாக்ஸ்கான் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தித் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இதுபோன்ற தவறான செய்திகள் அதை மட்டுப்படுத்துவது போல இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொய்யான தகவல்: இது தொடர்பாக விவரம் அறிந்த சிலர் கூறுகையில், "சமீபத்தில் வேலைக்கு எடுக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் திருமணமான பெண்கள் என்று ஃபாக்ஸ்கான் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கை சேர்ந்தவர்கள் திருமணமானவர்கள் ஆகும். இந்தியாவில் மற்ற உற்பத்தித் துறையிலும் இதே அளவுக்கே திருமணமான பெண்கள் வேலை செய்கிறார்கள்" என்றார்.
ஃபாக்ஸ்கான் ஆலையில் இப்போது 70 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் வேலை செய்து வருகிறார்கள். சுமார் 45 ஆயிரம் பெண்கள் வரை அங்கு வேலை செய்து வருகிறார்கள். இதன் மூலம் இந்தியாவிலேயே பெண்கள் அதிகளவில் வேலை செய்யும் தொழிற்சாலை என்ற பெயரை இது பெற்றுள்ளது.
என்ன காரணம்: திருமணமான இந்து பெண்கள் தாலி உள்ளிட்ட ஆபரணங்களை அணிவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. இது முழுக்க முழுக்க பக்கச் சார்பானது என்றும், இதுபோன்ற தொழிற்சாலைகளில் உடலில் எந்தவொரு உலோகம் இருந்தாலும் அது பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதாலேயே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஃபாக்ஸ்கான் தெரிவித்துள்ளது
வழக்கமான ஒன்று: மேலும் கூறுகையில், "இது அனைவருக்கும் பொதுவான விதி.. ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி.. அவர்கள் திருமணாவர்களாக இருந்தாலும் திருமணமாகாதவர்களாக இருந்தாலும் சரி.. அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி தொழிற்சாலையில் பணிபுரியும் போது அனைத்து விதமான உலோகங்களையும் அகற்ற வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காகவே எந்தவொரு உலோகத்தையும் அணிந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.. பல்வேறு தொழிற்சாலைகளிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் உள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.
-
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்











Click it and Unblock the Notifications