அஸ்வின் பதில் அளிக்க வேண்டும்.. 2 பெரிய நெருக்கடியில் தமிழக வீரர்.. முன்னாள் வீரர் சரமாரியாக அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் 2021 தொடரில் ஆடி வரும் தமிழ்நாடு வீரர் அஸ்வினுக்கு முன்னாள் வீரர் ஒருவர் முக்கியமான அறிவுரைகளை வழங்கி உள்ளார்

ஐபிஎல் 2021 தொடரில் இரண்டாவது ப்ளே ஆப் குவாலிபயர் ஆட்டம் இன்று நடக்க உள்ளது. முதல் குவாலிபயர் ஆட்டத்தில் டெல்லி அணி சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்தது. இதனால் சிஎஸ்கே பைனல் சென்றது.

எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரை வீழ்த்திய கொல்கத்தா அணிக்கும் டெல்லி அணிக்கும் இன்று இரண்டாவது குவாலிபயர் ஆட்டம் நடக்க உள்ளது. இதில் வெற்றிபெறும் அணி பைனல் செல்லும்.

டெல்லி

டெல்லி

2021 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி நன்றாகவே ஆடியது. ஆனாலும் டெல்லி அணியில் இருக்கும் தமிழ்நாடு வீரர் அஸ்வின் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. அவரின் பவுலிங் அவ்வளவு நம்பிக்கை அளிக்க கூடியதாக இல்லை. அணியில் இருக்கும் சக வீரர் அக்சர் பட்டேல் நன்றாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். ஆனால் அஸ்வின் அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை.

அஸ்வின்

அஸ்வின்

இந்திய உலக கோப்பை டி 20 அணியில் ஏற்கனவே அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். ஆனால் அஸ்வின் இந்த தொடரில் முதல் தேர்வாக இருப்பாரா என்பது சந்தேகம்தான். பெரும்பாலும் அக்சர் பட்டேல் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர்தான் முதல் தேர்வாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருண் காயம் அடையும் பட்சத்தில் அஸ்வின் ஆட வாய்ப்பு உள்ளது.

Recommended Video

    KL Rahul will return to RCB in IPL 2022 |Oneindia Tamil
    அஸ்வின் மோசமான ஆட்டம்

    அஸ்வின் மோசமான ஆட்டம்

    இந்த சீசனில் அஸ்வினின் மோசமான ஆட்டம் காரணமாக அஸ்வின் முக்கியமான 2 நெருக்கடியில் இருக்கிறார். முதல் விஷயம் இன்றைய போட்டியில் அவர் கொல்கத்தாவிற்கு எதிராக சிறப்பாக ஆட வேண்டும். மற்ற ஸ்பின் பவுலர்கள் நன்றாக ஆடி வரும் நிலையில் உலகக் கோப்பை டி 20 தொடரில் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற வேண்டும் என்றால் இன்று கண்டிப்பாக அஸ்வின் சிறப்பாக ஆட வேண்டும்.

    ஸ்பின்

    ஸ்பின்

    இன்றைய ஆட்டம் ஷார்ஜாவில் நடக்க உள்ளது. இங்கு ஸ்பின் பவுலர்கள், முக்கியமாக ஆப் ஸ்பின் பவுலர்கள் நன்றாக ஆடுவார்கள் என்பதால் அஸ்வின் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இரண்டாவது சிக்கல் என்றால் அஸ்வின் கொஞ்சம் நல்ல பெயர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த சீஸனில் இயான் மோர்கனுடன் சண்டை போட்டு விமர்சனங்களை எதிர்கொண்டார்.

    மோர்கன் சண்டை

    மோர்கன் சண்டை

    அதன்பின் ருத்துராஜுக்கு பவுலிங் செய்ய சென்று கடைசி நேரத்தில் பவுலிங் செய்யாமல் அஸ்வின் நடந்து கொண்ட விதமும், அதற்கு ருத்துராஜ் பதிலடி கொடுத்தது பெரிய சர்ச்சனையாது. இதனால் அஸ்வின் களத்தில் இன்னும் கொஞ்சம் மூத்த வீரர் போல செயல்பட வேண்டும் என்று பலர் அறிவுரை வழங்கி வருகிறார்கள். இந்த விமர்சனங்களை ஆப் செய்ய வேண்டும் என்றால் அஸ்வின் இன்று நன்றாக ஆட வேண்டும்.

    விமர்சனம்

    விமர்சனம்

    இன்று தனது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக மட்டுமே அஸ்வின் தனது மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்க முடியும். அஸ்வின் தனது பவுலிங் மூலம் அனைவருக்கும் இன்று பதிலடி கொடுக்கும் கட்டாயத்தில், இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் தனது இருப்பை உறுதி செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்.

    அஸ்வின் பதிலடி

    அஸ்வின் பதிலடி

    இந்த நிலையில்தான் அஸ்வினுக்கு முன்னாள் வீரர் கம்பீரும் முக்கிய அறிவுரை வழங்கி உள்ளார். அதில், அஸ்வினை டெல்லி அணி சரியாக பயன்படுத்தவில்லை என்று நான் கூற மாட்டேன். அவர் கொஞ்சம் தனது திறமைக்கும் கீழ் விளையாடி இருக்கிறார். அவர் கொஞ்சம் திருப்திகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் சார்ஜா மைதானத்தில் இந்த முறை அஸ்வின் சரியாக ஆடவேண்டும்.

    கம்பீர்

    கம்பீர்


    சார்ஜா மைதானம் ஆப் ஸ்பின் பவுலர்களுக்கு நன்றாக உதவும். அதிலும் டெல்லியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர். இதனால் அஸ்வின் அதை பயன்படுத்திக்கொண்டு ஆட வேண்டும். இன்று அஸ்வின் ஆட்டம்தான் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்க போகிறது, என்று கம்பீர் அறிவுரை வழங்கி உள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+