அடுத்தடுத்து இடி.. நடராஜனின் கனவை உலுக்கிய 4 சம்பவம்.. நேரம் பார்த்து இப்படியா நடக்கணும்?
சென்னை: ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் நடராஜன் திடீரென கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் கெரியரில் இது பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.
இந்திய அணியின் எதிர்காலங்களில் ஒருவராக பார்க்கப்படும் வீரர் நடராஜன். தமிழ்நாடு வீரரான இவர் ஐபிஎல் போட்டிகளிலும், டிஎன்பிஎல் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்குள் தேர்வானார். 2020 ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடியதால் இந்திய அணிக்குள்ளும் இவர் வாய்ப்பு பெற்றார்.
வாய்ப்பு பெற்ற முதல் ஆஸ்திரேலிய தொடரிலேயே டி 20, டெஸ்ட், ஒருநாள் என்று அனைத்து பிரிவிலும் சிறப்பாக ஆடினார். நடராஜன் களமிறங்கினால் இந்தியா தோல்வியே அடையாது என்று அறிவிக்கும் அளவிற்கு நடராஜனின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்திய உலகக் கோப்பை டி 20 அணியிலும் இவர் இடம்பெறுவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

டி 20
கேப்டன் கோலியும் கூட, நடராஜன் குறித்து பாராட்டியே பேசி வந்தார். தமிழக வீரர் நடராஜன் குறித்து கேப்டன் கோலி முன்பு அளித்த பேட்டி ஒன்றில், நடராஜன் குறித்து இங்கு குறிப்பிட வேண்டும். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் நடராஜன் தன்னை நிரூபித்துள்ளார். அவர் மீது பிரஷர் இருந்த சமயத்திலும் கூட தன்னை யார் என்று நிரூபித்து இருக்கிறார்.அவர் ஆட்டம் வேற லெவலில் இருந்தது.

கட்டுக்கோப்பு
அவர் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தார். நடராஜன் மிகவும் கடினமாக உழைக்க கூடிய வீரராக இருக்கிறார். அதேபோல் அவர் மிகவும் பணிவான குணம் கொண்டவராக இருக்கிறார். அவருக்கு தான் என்ன செய்கிறோம் என்று தெரிகிறது. அடுத்த வருடம் டி 20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடராஜன் இதே போல ஆடினார் என்றால் சிறப்பாக இருக்கும் என்று கோலி குறிப்பிட்டு இருந்தார். இதனால் நடராஜனும் இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு தேர்வாவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வாழ்க்கையில் நடந்த 4 சம்பவங்கள் இந்த கனவுகளை சுக்குநூறாக உடைத்துள்ளது.

சம்பவம் 1
முதல் சம்பவம் இந்த சீஸனின் முதல் பாதியில் இவர் காயம் அடைந்தது. இந்த சீஸனின் தொடக்கத்தில் நடராஜன் காலில் அடிபட்டது. முட்டியில் பட்ட காயம் காரணமாக இவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் அவருக்கு லேசான அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் நடராஜன் வேகமாக மீண்டு வந்தார். ஆனால் உடனே போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. ஐபிஎல்லும் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.

சம்பவம் 2
பொதுவாக பவுலர்கள் காயம் ஏற்பட்டால் உடனே பெரிய தொடர்களில் எடுக்கப்பட மாட்டார்கள். அவர்கள் மீண்டும் பயிற்சி எடுத்து ரிதமிற்கு திரும்பும் வரை அணியில் எடுக்கப்பட மாட்டார்கள். இதனால் நடராஜனை இலங்கை தொடரிலும் எடுக்கவில்லை. இலங்கை தொடரில் டி 20 ஆடி இருந்தால் இந்திய டி 20 உலகக் கோப்பை அணிக்கு செல்ல முடியும் என்று நடராஜன் நம்பி இருந்தார். ஆனால் அவர் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து இலங்கை தொடரில் அவரை எடுக்கவில்லை.

சம்பவம் 3
இப்படி வரிசையாக இரண்டு ஏமாற்றங்கள் வந்த பின்தான் மூன்றாவதாக அந்த செய்தியும் நடராஜனுக்கு இடியாக வந்தது. தொடர்ந்து ஆடாமல் ஓய்வில் இருந்த நிலையில் இவரை டி 20 உலகக் கோப்பை அணியிலும் கோலி எடுக்கவில்லை. கோலி என்னதான் முன்பு வாக்கு கொடுத்தாலும் ஸ்பின் பவுலர்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்த அணியை தேர்வு செய்து இருந்தார். இதனால் சிராஜ் போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் நடராஜனையும் ஓரம் கட்டினார். இதை நடராஜனும் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.

சம்பவம் 4
இந்த நிலையில்தான் எப்படியாவது ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பாதியில் நடராஜன் நன்றாக ஆடி தனது திறமையை வெளிப்படுத்துவார். அடுத்தடுத்த தொடர்களில் இவருக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக அவர் மீண்டும் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று போட்டியில் அவர் ஆட மாட்டார். அடுத்த போட்டியில் அவர் ஆடுவதும் சந்தேகம்.

சிக்கல்
அதற்கு பின் அவருக்கு இந்த தொடரில் பெரிய வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். இதனால் அவர் பார்மை இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நடராஜன் இதை எல்லாம் ஏற்கனவே பார்த்துவிட்டார். ஐபிஎல்லுக்கு வருவதற்கு முன்பே பல முறை காயங்கள் இவரை முடக்கி போட்டு இருக்கிறது. காயம் தொடங்கி, தவறான ஆக்சன் வரை பல காரணங்களால் இவர் ஆட முடியாமல் போய் இருக்கிறது. அதில் இருந்து எல்லாம் மீண்டு வந்த நடராஜன் கண்டிப்பாக இதில் இருந்தும் மீண்டு வருவார் என்று நம்பலாம்.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக











Click it and Unblock the Notifications