சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்!
அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் இந்த சீசன் முழுக்க குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆகப்பெரும் பலமே அவர்களின் டாப்-ஆர்டர் பேட்டிங்தான். குறிப்பாக சாய் சுதர்சன்- கில் மட்டும் பல போட்டிகளை வென்று தந்துள்ளனர். ஆனால், பைனலிஸ் இருவருமே ஆட்டமிழந்துவிட்ட நிலையில், பேட்டிங்கில் கம்பேக் கொடுப்பது கிட்டத்தட்ட முடியாத ஒன்றாகிவிட்டது.
ஐபிஎல் இறுதி போட்டி இப்போது நடந்து வருகிறது. போட்டி சுவாரஸியமான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குஜராத் அணி இப்போது பேட்டிங்கில் தடுமாறி வருகிறது. குஜராத் அணிக்கு டாப் ஆர்டர் தான் எப்போதுமே பலம். பல போட்டிகளில் கில்- சுதர்சன் மட்டும் குஜராத்தை அசுர வேகத்தில் ஓட வைத்துள்ளனர்.

டாப் ஆர்டர்
லீக் சுற்றுகளில் எந்த அணியாக இருந்தாலும் இருவரில் யாராவது ஒருவர் நங்கூரமிட்டபடி நின்று ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்வார்கள். முதல் பேட்டிங், சேஸிங் என எதுவாக இருந்தாலும் கலக்கல் ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளனற். கில்- சாய் சுதர்சன் இணைந்து அமைத்த பல 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப்கள் தான் குஜராத் அணியை பிளே-ஆஃப் வரை கம்பீரமாகத் தூக்கிச் சுமந்தது.
குஜராத்தை பொறுத்தவரை டாப்-ஆர்டர் அதிரடியாக ரன் குவித்துவிடுவார்கள். இதனால் பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு வேலை இல்லாமல் சுலபமாக மேட்ச் முடிந்துவிடும். ஆனால், இந்த ஃபைனல் போட்டியில் குஜராத் அணிக்கு விதி வேறு மாதிரி விளையாடிவிட்டது.
பேக் டூ பேக் காலி
குஜராத் அணியின் தூண்களான கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து ஏமாற்றியுள்ளனர். இறுதி போட்டியில் குஜராத் 22 ரன்களை எடுத்திருந்தபோது கில் அவுட் ஆனார். அவர் வெறும் 10 ரன்களை மட்டுமே எடுத்து பொவிலியன் திரும்பினார். அவர் சென்ற சில நிமிடங்களிலேயே சாய் சுதர்சனும் அவுட் ஆனார். அவர்களைத் தொடர்ந்து நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சிந்துவும் வெறும் 20 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப, குஜராத் டைட்டன்ஸ் தற்போது தவித்து வருகிறது.
4வது விக்கெட்
10-வது ஓவரின் கடைசி பந்தில் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் விக்கெட்டை இழக்கும் சூழல் உருவானது. நல்வாய்ப்பாக அந்த கேட்ச் பந்து தரையில் பட்டுவிட்டதால் வாஷிங்டன் தலை தப்பியது. ஆனாலும், 10 ஓவர்கள் முடிவில் 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து குஜராத் தடுமாறியது. 12 ஓவரின் முதல் பந்திலேயே அனுபவம் வாய்ந்த பட்லரும் நடையை கட்டினார். கைவசம் 6 விக்கெட்கள் இருந்தாலும் கூட குஜராத்தின் மிடில் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் அவ்வளவு ஒன்றும் பலம் இல்லை.
டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகிவிட்டதால், இந்த ஃபைனல் போட்டியில் குஜராத் அணி பேட்டிங்கில் ஒரு இமாலய கம்பேக் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால், அது கிட்டத்தட்ட முடியாது என்றே என்றே தோன்றுகிறது. இந்தாண்டு குஜராத்தில் மிடில் ஆர்டரில் யாருமே சோபிக்காத நிலையில், ரன் ரேட்டும் மோசமாகவே இருக்கிறது.
ஒரே திட்டம்
இப்போது குஜராத் அணிக்கு இருக்கும் ஒரே திட்டம், எஞ்சியிருக்கும் ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் கொஞ்சம் அதிரடியாக ஆடி, ஓரளவுக்குப் போராடக்கூடிய ஒரு கௌரவமான ஸ்கோரை எட்டிப் பிடிப்பதுதான். அதன் பிறகு, தங்களின் பவுர்புல் பந்துவீச்சை அக்ரோஷமாகப் பயன்படுத்தி, ஆர்சிபி அணிக்கு ஆரம்பத்திலேயே அவுத்தம் கொடுத்தால் மட்டுமே குஜராத் அணியால் கம்பேக் தர முடியும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications