சரியாக நேரம் பார்த்து.. சிஎஸ்கேவிற்கு வந்த நல்ல செய்தி?..உற்சாகத்தில் தோனி.. அப்போ வெற்றி கன்பார்மா
சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இன்று மிக முக்கியமான போட்டியில் ஆட உள்ளது. டெல்லியை ப்ளே ஆப் குவாலி ஃபயர் சுற்றில் சிஎஸ்கே எதிர்கொள்ள இருக்கிறது.
சிஎஸ்கே அணிக்கு இது மிக முக்கியமான போட்டியாகும். இந்த சீசனில் இரண்டு முறையும் சிஎஸ்கே டெல்லியிடம் வீழ்ந்துவிட்டது. இதனால் இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று வெற்றிபெற்றால் சிஎஸ்கே எளிதாக பைனல்ஸ் சென்றுவிடும்.
இதனால் சிஎஸ்கேவின் ஆட்டம் அதிக கவனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதிலும் கடைசியாக மூன்று போட்டியில் சிஎஸ்கே வரிசையாக தோல்வி அடைந்துள்ளது. இதனால் சிஎஸ்கே உடனே வெற்றி பார்மிற்கு திரும்ப வேண்டும்.

நல்ல பார்ம்
இந்த சீஸனின் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் நல்ல பார்மில் இருந்த சிஎஸ்கே கடைசியாக நடந்த மூன்று போட்டியில் தோல்வி அடைந்தது. டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வரிசையாக தோல்வி அடைந்தது. சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பேட்டிங் மோசமாக சொதப்பியதே இந்த தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம் ஆகும்.

மிடில் ஆர்டர்
மிடில் ஆர்டரில் ஆட வேண்டிய ரெய்னா காயம் அடைந்தது. அதன்பின் மொயின் அலி பார்ம் இழந்தது. வாய்ப்பு கிடைத்தும் இரண்டு போட்டியில் உத்தப்பா சரியாக ஆடவில்லை. அதேபோல் தோனியின் பேட்டிங் பார்மும் மிக மோசமாக உள்ளது. ஜடேஜா, ராயுடு மிடில் ஆர்டரில் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலை உள்ளது.

ரெய்னா காயம்
ரெய்னா காயம் அடைந்தது சிஎஸ்கேவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முதல் பாதி ஐபிஎல் 2021 தொடரில் ரெய்னா சிறப்பாக ஆடினார். அதோடு ப்ளே ஆப் போட்டிகளில் ரெய்னா சிறப்பாக ஆடி உள்ளார். ஆனால் அவர் திடீரென காயம் அடைந்தது சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இவர் ப்ளே ஆப் ஆடுவதே சந்தேகமான விஷயமாக இருந்தது.

ப்ளே ஆப்
காயம் குணமடையுமா என்ற கேள்வி இருந்தது. ரெய்னாவின் இடத்தில் உத்தப்பாதான் ப்ளே ஆப் போட்டிகளில் ஆடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் ரெய்னா இன்றைய போட்டியில் ஆடுவார் என்று கூறப்படுகிறது. ரெய்னாவிற்கு காயம் சரியாகிவிட்டது.

காயம்
அவர் மீண்டும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் மீண்டும் சிஎஸ்கேவில் ஆடுவார் என்று தகவல்கள் வருகின்றன.முக்கியமான நேரத்தில் சிஎஸ்கே அணிக்கு இந்த நல்ல செய்தி சென்று இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் 4வது இடம் அல்லது பழைய இடமான 3வது இடத்தில் ரெய்னா ஆட வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. ரெய்னா ஆடுவாரா இல்லையா என்பது இன்று மாலை உறுதியாகிவிடும்.

ரெய்னா
ரெய்னா ஆடும் பட்சத்தில் அது அணியில் மீண்டும் சமநிலையை கொடுக்கும். அதேபோல் தோனிக்கும் பிளான்படி செல்ல வசதியாக இருக்கும். ரெய்னா திரும்பி வருவது தோனிக்கும் உற்சாகத்தை கொடுக்கும். ரெய்னா திரும்பி வரும் பட்சத்தில் தொடர்ந்து தோல்வி பாதையில் சென்ற சிஎஸ்கே மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications