என்னங்க இது? ஸ்ரீகாந்த் முதல் பேன்ஸ் வரை பலரையும் குழப்பிய சம்பவம்.. சிஎஸ்கே மேட்சில் நடந்தது என்ன?
சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இன்று டெல்லி அணி எடுத்த முடிவு ஒன்று பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சிஎஸ்கே அணிக்கும் டெல்லிக்கும் இடையில் இன்று ப்ளே ஆப் ஐபிஎல் 2021 ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இதில் தொடக்கத்தில் இருந்து சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சீசனில் இரண்டு முறை சிஎஸ்கே டெல்லியிடம் தோல்வி அடைந்ததால் இன்றைய ஆட்டம் அதிக கவனம் பெற்றுள்ளது.

டெல்லி
இந்த போட்டியில் டெல்லி அணி நன்றாகவே தொடங்கியது. பொதுவாக சிஎஸ்கே அணிக்கு எதிராக தவான், ப்ரித்வி இரண்டு பேருமே நன்றாக ஆடுவார்கள். அதன்படியே இன்றும் ப்ரித்வி ஷா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். பொதுவாக பவுன்சர் பந்துகளில் கேட்ச் கொடுத்து ப்ரித்வி அவுட் ஆவார். இன்றும் அவருக்கு பவுன்சர் போடப்பட்டது. ஆனால் கொஞ்சம் லக்கியாக இருந்த ப்ரித்வி அங்கங்கே பவுண்டரி அடித்து பவுன்சரில் இருந்து தப்பித்தார்.

ஆட்டம்
இவரின் ஆட்டம் காரணமாக சிஎஸ்கே கொஞ்சம் திணறியது. ஆனால் எதிர் பக்கம் சிறப்பாக பவுலிங் செய்த ஹஸல்வுட் வரிசையாக விக்கெட்டுகளை எடுத்தார். தவான் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஷ்ரேயாஸ் ஐயரும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் டெல்லி அணி கொஞ்சம் திணற தொடங்கியது. ஒரு பக்கம் வேகமாக ஆடி வந்த ப்ரித்வி ஷாவும் வேகம் இழந்தார்.

சிஎஸ்கே
இந்த நிலையில்தான் ஷ்ரேயாஸ் ஐயர் அவுட் ஆனதும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்சர் பட்டேல் இறங்கினார். அக்சர் பட்டேல் கொஞ்சம் நன்றாக பேட்டிங் செய்வார் என்றாலும் திடீரென 4வது இடத்தில் பேட்டிங் இறங்கியது பலரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கண்டிப்பாக பயிற்சியாளர் பாண்டிங்கின் முடிவாக இது இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

அக்சர் பட்டேல்
பண்ட் மற்றும் ஹெட்மயர் இருக்கும் போது ஏன் அக்சர் பட்டேல் இறங்கினார் என்று கேள்வி எழுந்தது. கமென்டரி செய்து கொண்டு இருந்த கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூட குழம்பிப் போய்.. என்னங்க இது.. ஏன் இப்படி அக்சர் பட்டேலை இறக்கி உள்ளனர். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. பேட்டிங் ஆர்டரை மாற்றுவது எந்த அணிக்கும் உதவி செய்யாது. பண்ட் மற்றும் ஹெட்மயர் இருக்கும் போது ஏன் அக்சர் இறங்கினார்.

பாண்டிங்
பாண்டிங்தான் இதை செய்து இருப்பார், இது எல்லாம் செட்டாகாது என்று விமர்சனம் செய்தார். இணையத்திலும் நெட்டிசன்கள் பலர் இந்த முடிவால் குழம்பினார்கள். அதிக ரன் தேவைப்படும் நேரத்தில் அக்சர் இறங்கியது ஏன் என்று கேள்வி எழும்பியது. இன்று டெல்லி அணி ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இறங்கியது இதற்கு காரணமாக இருக்கலாம்.

ரன் ரேட்
ஆனால் இன்று அக்சர் இறங்கி ரன் ரேட்டை குறைத்ததுதான் மிச்சம். ஆட்டத்தின் வேகத்தை டெல்லி அணிக்கு இவர் குறைத்தார். 11 பந்துகள் பிடித்தவர் 10 ரன்கள் எடுத்தார். இது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications