200 அடிச்சும் தோத்துட்டோம்னு கூச்சமா இருக்கா? போக போக பழகிடும்! ஆர்சிபி தோல்வி! அதிரிபுதிரி மீம்ஸ்!
சென்னை: நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான திரில்லிங் டி 20 போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. இதை வைத்து பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் அணி தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் போக போக வேகம் காட்டியது. டு பிளசிஸ் 88, கோலி 41, தினேஷ் கார்த்திக் 32 ரன்கள் எடுக்க அந்த அணி 205-2 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் எளிதாக வெல்லும் என்று கருதப்பட்ட நிலையில், தவான் 43, ராஜபக்சே 43, ஷாருக்கான் 24, ஓடியன் 25 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி எளிதாக இலக்கை அடைந்து வென்றது.

தோல்வி மேல் தோல்வி
பெங்களூர் அணியின் இந்த தோல்வியை பலர் கிண்டல் செய்து மீம் வெளியிட்டுள்ளனர். இந்த தொடரில் முக்கியமான மூன்று அணிகளும் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளன. பெங்களூர் அணி நேற்று பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்தது. அதேபோல் டெல்லியிடம் நேற்று மும்பை அணியும் தோல்வி அடைந்தது. அதற்கு முன் கொல்கத்தா அணியிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. மூன்று அணிகளும் வாங்கிய பலத்த அடியை கிண்டல் செய்து இவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

200 அடிச்சும் தோல்வி
பெங்களூர் அணி இதுவரை எந்த தொடரிலும் ஐபிஎல்லில் கோப்பை வென்றது இல்லை. இதை விமர்சனம் செய்து பலர் மீம் போட்டுள்ளனர். டு பிளசிடம் கோலி சொல்வது போல.. முதல் மேட்ச் தோல்வி அடைந்ததும் அப்படித்தான் இருக்கும். பின்னர் அதுவே போக போக சரியாகிவிடும் என்று கூறுவது போல இவர் மீம்போட்டுள்ளார்.

புதிய கேப்டன்
ஆர்சிபியின் புதிய கேப்டன் டு பிளசிஸ் நேற்று மிகவும் சிறப்பாக ஆடினார். நன்றாக கேப்டன்சியும் செய்தார். ஆனாலும் அந்த அணி தோல்வி அடைந்துவிட்டது. சிஎஸ்கேவில் கோப்பையை வென்று கொடுத்த டு பிளசிஸ் இப்படி முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்ததை வைத்தும் பலர் மீம் போட்டுவருகிறார்கள் . அதெல்லாம் மறந்துடு என்று கோலி டு பிளஸிஸுக்கு அறிவுரை சொல்வது போல இந்த மீம் வெளியிடப்பட்டுள்ளது.

கவலை படாதீங்க
முக்கியமாக ஆர்சிபி அணியின் பவுலிங்கை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 200க்கும் மேல் அடித்தும், அதை கூட டிபன்ட் செய்ய முடியாமல் ஆர்சிபி பவுலர்கள் திணறி உள்ளனர். அதிலும் நேற்று பல வைட் பந்துகளை ஆர்சிபி அணி வீசியது குறிப்பிடத்தக்கது.

கோலி
கோலியின் கேப்டன்சி சரியில்லை, அவர் பவுலர்களை கையாளும் விதம் சரி இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் இருந்தன. இதனால் டு பிளசிஸ் உள்ளே கொண்டு வரப்பட்டு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார் . ஆனால் அவரும் நேற்று பவுலர்களை சரியாக கையாளவில்லை. இதை பலர் கலாய்த்து மீம் வெளியிட்டுள்ளனர்.

ஆர்சிபி சாபம்
நேற்று அதிலும் பெங்களூர் அணியின் தோல்வியை பலரும் விமர்சனம் செய்தனர். என்னதான் பெங்களூர் அணியில் டு பிளசிஸ் கேப்டனாக இருந்தாலும், தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடினாலும் அது ஆர்சிபி அணி. அதில் எவ்வளவு ரன்கள் அடித்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஜெயிக்க முடியாது என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications