ஜடேஜா ஆட மாட்டாரா? ஏன்? கொதிக்கும் பேன்ஸ்.. என்னதான் நடக்குது சிஎஸ்கேவில்.. பரபரப்பு பின்னணி!
சென்னை: சிஎஸ்கே அணியில் ஆடி வரும் ஜடேஜா இந்த சீசனில் இருந்து வெளியேற போவதாக பல்வேறு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Recommended Video
சிஎஸ்கே அணி இதுவரை 11 போட்டிகளில் இந்த சீசனில் ஆடி உள்ளது. இதில் கடந்த 3 போட்டிகளை சிஎஸ்கே அணி தோனி கேப்டன்சியில் ஆடியது.
இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே இதில் சிஎஸ்கே வென்றுள்ளது. இனி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக சிஎஸ்கே வென்றால் மட்டுமே ப்ளே ஆப் செய்யும் வாய்ப்புகள் உள்ளன.

சிஎஸ்கே
அதிலும் கூட பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் இனி மீதம் உள்ள போட்டிகளில் எல்லாம் தோல்வி அடைய வேண்டும். இதனால் சிஎஸ்கே அணிக்கு ப்ளே ஆப் செல்லும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளது. இந்த சீஸனின் தொடக்கத்தில் ஜடேஜாதான் சிஎஸ்கே கேப்டனாக இருந்தார். 8 போட்டிகளில் அவர்தான் கேப்டனாக இருந்தார். ஆனால் அதில் இரண்டில் மட்டுமே சிஎஸ்கே வென்றது.

விமர்சனம்
இதனால் கேப்டன்சியில் இருந்து ஜடேஜா ராஜினாமா செய்தார். முதலில் ஜடேஜாவை கேப்டன்சியில் இருந்து சிஎஸ்கே தூக்கியதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர்தான் ஜடேஜாவே கேப்டன்சியில் இருந்து விலகிவிட்டார் என்றனர். அவருக்கு பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் அவரே சுயமாக முன் வந்து கேப்டன்சியில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.

காயம்
இந்த நிலையில்தான் அவர் கடந்த போட்டியில் காயம் காரணமாக ஆடவில்லை. டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் காயம் காரணமாக ஆடவில்லை. இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. கேப்டன்சி நீக்கப்பட்ட பின்.. இப்போது அணியில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் விமர்சனங்களை வைத்தனர். பலர் இதை பற்றி இணையத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

ஆட மாட்டார்
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியில் ஆடி வரும் ஜடேஜா இந்த சீசனில் இருந்து வெளியேற போவதாக பல்வேறு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி காரணமாக இணையத்தில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. ஜடேஜாவை சிஎஸ்கே அவமானப்படுத்துகிறது. அவரை வேண்டும் என்றே ஒதுக்குகிறது என்று பலரும் இணையத்தில் விமர்சனம் வைத்தனர். ஆனால் சிஎஸ்கே ஜடேஜாவை ஒதுக்கவில்லை என்று சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணி
இது தொடர்பாக சிஎஸ்கே வட்டாரத்தில் விசாரித்தத்தில், இணையத்தில் பரவும் வதந்திகள் தவறு . ஜடேஜாவிற்கு காயம் ஆறவில்லை. இது ஆறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரியாகவில்லை. இப்போது அவர் ஆடினால் அது அவருக்கு பிரச்சனை ஆகும். இந்திய அணியில் இணைவது கடினம் ஆகும். அவரின் நலன் கருதி ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது என்று சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications