ஐபிஎல் பைனல்.. மழை குறுக்கிட சான்ஸ் இருக்காம்.. போட்டி கைவிடப்பட்டால் இதுதான் நடக்கும்.. ரூல்ஸ் இதோ
சென்னை: ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வெதர் ரிபோர்ட்கள் சொல்கின்றன.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்றுக்கள் விறு விறுப்பாக நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் டாப் 4 இடங்கள் பிடித்த அணிகளான குஜராத் டைட்டன்ஸ், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

'பிளே-ஆப்' சுற்று முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
4- முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையும் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பிலும் களம் இறங்குகின்றன. இந்த போட்டியை இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.ஏனெனில் அந்த அளவுக்கு கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை ஐபிஎல் போட்டிகள் பெற்றுள்ளது.
இதனால் ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும், நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக சின தனியார் வானிலை அமைப்புகள் கூறியிருக்கின்றன. இதனால் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். ஒருவேளை மழை குறுக்கிட்டு போட்டி கைவிடப்படும் சூழல் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படுமா? அல்லது சாம்பியன் யார் என்பதை அறிவிக்க வேறு விதிகள் இருக்கிறதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதற்கான விளக்கம் என்னவென்றால், ஐபிஎல் போட்டிகள் இன்று நடைபெறாமல் கைவிடப்பட்டால் ரிசர்வ் டே முறையில் போட்டி நாளை நடத்தப்படும். இரு அணிகளும் குறைந்த பட்சம் 5 ஓவர்கள் கூட முழுமை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் ரிசர்வ் டே (திங்கள் கிழமை) வில்போட்டி நடைபெறும்.
எனினும், சில கூடுதல் கண்டிஷன்களும் மனதில் வைத்தே ரிசர்வ் டே போட்டி நடைபெறும். இன்று ஒரே ஒரு பந்து வீசப்பட்டால் கூட நாளை போட்டி விட்ட இடத்தில் இருந்து அப்படியே தொடரும். டாஸ் மட்டும் போடப்பட்டு போட்டி நடைபெறாமல் இருந்தால் போட்டி முழுமையாக 20 ஓவர்களும் வீசபட்டு நடைபெறும். டாஸும் மீண்டும் போடப்படுவதோடு...ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்களை மாற்றிக்கொள்ள கூட கேப்டன்களுக்கு அனுமதி உண்டு. எது எப்படியோ இன்று வருண பகவான் போட்டிக்கு வழி விட வேண்டும் என்பதே ரசிகர்ளின் எதிர்பார்ப்பாக உள்ளது
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications