இளசுகளை ஈர்க்கும் இளம்பெண்கள்.. ஐபிஎல் சீயர் லீடர்ஸ்களின் சம்பளம் இதுதான்! என்ன வியப்பா இருக்குதா?
சென்னை: ஐபிஎல் 16வது சீசன் போட்டிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் தான் வீரர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்த கண்களை கவரும் வகையில் இளம்பெண்களான சீயர் லீடர்ஸ்கள் மீண்டும் நடனமாடி வருகின்றனர். இந்நிலையில் தான் சீயர் லீடர்ஸ்கள் பெறும் சம்பளம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. சீயர் லீடர்ஸ்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் பட்டியலில் சிஎஸ்கே, பஞ்சாப் அணிகள் குறைந்த சம்பளம் வழங்கும் நிலையில் கொல்கத்தா, மும்பை, ஆர்சிபி அணிகள் தாராளமாக சம்பளம் வழங்கி டாப் இடங்களில் இருக்கின்றன.
இந்தியாவில் 16வது ஐபிஎல் சீசன் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 31ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கியது. நேற்று வரை மொத்தம் 10 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று 2 போட்டி நடைபெற உள்ளது. இன்று மதியம் 3.30 மணிக்கு முதல் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோத உள்ளன.

அதன்பிறகு இன்று இரவு 7.30 மணிக்கு ஐபிஎல்லில் ஹைவொல்டேஜ் போட்டி நடக்கிறது. அதாவது 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ‛தல' தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் மோதுகின்றன. முதல் வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி போராடும் நிலையில் சிஎஸ்கே அணி தொடர்ந்து 2வது வெற்றியை பெற முனைப்பு காட்டும். இதனால் இந்த போட்டியில் அனல் பறக்கும்.
சீயர் லீடர்கள்: சரி இன்றைய போட்டி நிலவரம் இருக்கட்டும்.. இந்த விறுவிறுப்பான போட்டிக்கு நடுவே தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஐபிஎல் போட்டியை நேரில் அல்லது டிவியில் பார்க்கும் ரசிகர்கள் முதல் கிரவுண்டில் இறங்கி சிக்சர், போர் என நாலாபுறமும் விளாசும் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சால் ஸ்டம்புகளை சிதறவிடும் பவுலர்கள், விண்ணில் பறந்து வரும் பந்துகளை கேட்ச் செய்யும் பீல்டர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்தும் சமாச்சாரம் ஒன்று உண்டென்றால் அது இளமை துடிப்போடு நடனமாடும் இளம்பெண்களான சியர் லீடர்கள் (Cheer Learders or Cheer Girls) தான். இந்நிலையில் தான் சீயர் லீடர்களின் தேர்வு எப்படி நடக்கும், அவர்களின் சம்பளம் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
எந்த நாட்டை சேர்ந்தவர்கள்: இந்தியாவில் ஐபிஎல் போட்டியின்போது மைதானத்தில் பவுண்டரி கோட்டுக்கு வெளியே அமைக்கப்பட்ட மேடையில் ஒவ்வொரு போட்டியின்போது 2 முதல் 4 இளம்பெண்கள் நடனமாடுவதை நாம் பார்த்திருப்போம். சீயர் லீடர்கள் என அழைக்கப்படும் இவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வருகின்றனர்.
இந்தியர்களும் வருகை: பெரும்பாலான இளம்பெண்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தற்போது தான் இந்தியாவை சேர்ந்த பெண்கள் சீயர் லீடர்களாக வர தொடங்கி உள்ளனர். இதனால் தான் இந்திய பெண்களை சீயர் லீடர்களாக பார்ப்பது என்பது அரிதாகவே இருக்கிறது. இவர்கள் தங்களது அணி வீரர்களின் டீசர்ட் நிறத்தில் ஆடை அணிந்து வீரர்கள் சிக்ஸ், பவுண்டரி விளாசும்போதும், விக்கெட்டுகளை கைப்பற்றும்போதும் நடனமாடுவார்கள்.
தகுதிகள் என்னென்ன: மேலும் ஐபிஎல்லில் சீயர் லீடர்களாக வருவதற்கும் சில தகுதிகள் உள்ளன. அதாவது நடனம், மாடலிங் துறையில் சாதித்து இருக்க வேண்டும். ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களை தேர்வு செய்வதற்கும் ஆடிஷன் நடக்கும். அந்த ஆடிஷனில் திறமையை நிரூபித்தால் மட்டுமே ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தில் சீயர் லீடர்களாக கால்பதிக்க முடியுமாம்.
தொடர் பயிற்சி: மேலும் ஐபிஎல்லில் சியர் லீடர் நடனமாடினால் மட்டும் போதுமானது. உடலை வெவ்வேறு வகைகளில் வளைக்க வேண்டும். இதனால் நல்ல நெகிழ்வான, கவரும் வகையிலான உடலமைப்பு அவசியமாகும். இதனால் சீயர் லீடர்ஸ்களாக வலம் வரும் இளம்பெண்களும் முறையான உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதாவது விளையாட்டு வீரர்கள் களத்தில் என்னென்ன பயிற்சிகளைச் செய்கிறார்களோ அதே போலவே அவர்களும் பிரத்யேக பயிற்சிகளை செய்வார்களாம்.
சம்பளம் என்ன: தற்போதைய தகவலின்படி ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் தங்களின் சீயர் லீடர்களுக்கு ஒரு போட்டிக்கு குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வரை அணிகள் வழங்குவதாக கூறப்படுகிறது. சில வேளையில் போட்டியில் குறிப்பிட்ட அணி வெற்றி பெறும் பட்சத்தில் சிறப்பாக நடனமாடி கவனம் ஈர்த்த சீயர் லீடருக்கும் போனஸாகவும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. சராசரி என்று பார்த்தால் ஒரு போட்டிக்கு ரூ.14 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை சம்பளமாக சீயர் லீடர்ஸ்கள் பெறலாம் என கூறப்படுகிறது.
எந்த அணி டாப்: மேலும் அணிகள் வாரியாக பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் தங்களின் சீயர் லீடர்களுக்கு போட்டி ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்குவதாக கூறப்படுகிறது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் போட்டி ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்குகின்றன. அதிகபட்சம் சம்பளம் என்றால் அதனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வழங்குகிறது. அதன்படி கொல்கத்தா சீயர் லீடர்கள் போட்டி ஒன்றுக்கு ரூ.24 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகின்றனர்.
ரூ.5 லட்சம் வரை: ஐபிஎல்லை பொறுத்தமட்டில் ஒரு அணி குறைந்தபட்சம் 14 போட்டிகளில் பங்கேற்கும். அதன்படி பார்த்தால் சீயர் லீடர்கள் குறைந்தபட்சமாக ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை சம்பளமாக பெற வாய்ப்புள்ளது. சம்பளம் தவிர இந்தியாவில் அவர்கள் தங்கியிருப்பதற்கான செலவுகள் அணி நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதன்படி பார்த்தால் தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான செயலை சீயர் லீடர்களின் அணி நிர்வாகங்களே கவனித்து கொள்கின்றன.












Click it and Unblock the Notifications