தமிழகத்தில் 8 ஐபிஎஸ் உள்ளிட்ட 10 அதிகாரிகள் அதிரடி மாற்றம்
தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி காவல் ஆணையர் அருண் மாற்றம் இதில் முக்கியமானது.
தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகாரிகள் மாற்றம் விவரம் வருமாறு.

1. சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. விடுப்பில் இருந்து திரும்பிய ஐஜி மகேந்திர குமார் ரத்தோட் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் விஜயகார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டு திருச்சி மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. திருச்சி மாநகர ஆணையர் அருண் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6.மத்திய அயல் பணியில் இருந்து திரும்பிய டிஐஜி சரவணன் சுந்தர் திருச்சி சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

7.திருச்சி சரக டிஐஜி ராதிகா இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை டிஐஜி (பொது நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
8.மருத்துவ விடுப்பில் இருந்த எஸ்.பி, நிஷா விடுப்பு முடிந்து திரும்பிய நிலையில் சென்னை கணினி மயமாக்கல் பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
9.உளவுப்பிரிவு எஸ்.பி மாடசாமி இடமாற்றம் செய்யப்பட்டு சேலம் நகர சட்டம்-ஒழுங்கு (வடக்கு) பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் வேதரத்தினம் இடமாற்றம் செய்யப்பட்டு டிஜிபி அலுவலகத்தில் பணியமைப்பு பிரிவு ஏஐஜி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உள்துறை செயலர் எஸ் கே பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications