ராமநாதபுரம் முன்னாள் எஸ்பி வருண்குமார்.. சென்னைக்கு பணியிட மாற்றம்.. புதிய பொறுப்பு!
சென்னை: காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராமநாதபுரத்தின் முன்னாள் எஸ்பி வருண்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் இடம் மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதோடு ராமநாதபுரம் எஸ்.பி பொறுப்பில் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு பின் மத ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்று சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவியது. இதையடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எஸ்.பி வருண்குமார் சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்து இருந்தார்.
இது தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம், இது மத ரீதியான கொலை இல்லை, இதில் உரிய விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த விளக்கத்திற்கு பின் இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரிய சர்ச்சையை எழுப்பியது.
இந்த நிலையில் தற்போது ராமநாதபுரத்தின் முன்னாள் எஸ்பி வருண்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறையின் சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கும் பதவிக்கு மாற்றம் செய்யபப்ட்டுள்ளார். சென்னை காவல்துறையின் தனியங்கி மற்றும் கணினிமயமாக்கல் துறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications