இறையன்பு ரூமுக்குள் நுழைந்தவர் யார்னு பாருங்க.. ஒரே ஆச்சரியமா இருக்கே..எகிறியடிக்கும் கடலூர்.. சபாஷ்
சென்னை: தமிழக தலைமை செயலாளர் அறைக்குள் அந்த நபர் யார்? இறையன்பு அவருக்கு ஏன் வாழ்த்துக்களை சொன்னார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பலரையும் இந்த நிகழ்வு கவனிக்கவும் வைத்துள்ளது. என்ன காரணம்?
தமிழக அரசு சமீப காலமாகவே, அதிரடியாக அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.. துறை ரீதியான விஷயங்களில் தீவிர கவனத்தையும் மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், பசுமை மயானங்கள் விவகாரத்தையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
அந்தவகையில் பசுமை மயானங்களாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு, 4 நாட்களுக்கு முன்புகூட கடிதம் எழுதியிருந்தார்.

சுடுகாடுகள்: அந்த கடிதத்தில், பல இடங்களில் மயானங்கள் மற்றும் சுடுகாடுகள் அனைத்தும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது.
உயிரிழந்த மக்கள் உடல்களை மேலும் சிரமத்திற்கு ஆளாக்காத வகையில் மயானங்கள் பசுமையாக, தூய்மையாக, நேர்த்தியாக பராமரிக்கப்பட வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் "பசுமை மயானங்கள் மற்றும் சுடுகாடுகளை" அமைக்கும் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.
மயானம்: மயானம் மற்றும் சுடுகாடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.. அங்கெல்லாம் அடிப்படை வசதிகள் கூட இல்லை. சுகாதாரமின்றி தூய்மையற்றதாக மயானங்களாகவே அவைகள் காணப்படுகின்றன.. மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து, பூச்செடிகள் மற்றும் மரங்களை நட்டு , தண்ணீர் வசதி மற்றும் கொட்டகை அமைத்து "பசுமை மயானங்களை" உருவாக்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டின் பிம்பத்தையும் மேம்படுத்த இது பெரிதும் உதவும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஒரு முதியவருக்கு வாழ்த்து சொல்லி, கவுரவப்படுத்தியிருக்கிறார் இறையன்பு.. கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, அரங்கூர் கிராமத்தில், ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தில், கம்பி வேலிகள் அமைத்து, தென்னை, மா போன்ற பலன் தரும் பழ மரங்கள் மற்றும் நிழல் தரும் மரங்கள் ஏராளமாக நடப்பட்டுள்ளன. இவைகளை ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டர், தலைமைச் செயலருக்கு ஒரு அறிக்கையை அனுப்பியிருக்கிறார்..
விவசாயக்கூலி: அந்த மரங்களை எல்லாம், நட்டுவைத்தது, பராமரித்தது 70 வயது முதியவராம்.. அவர் பெயர் அர்ச்சுனன் என்ற தகவலையும், மாவட்ட கலெக்டர், தலைமைச்செயலாளர் இறையன்புவிடம் தெரிவித்திருக்கிறார்.. அவர் ஒரு விவசாயக் கூலி வேலை செய்பவராம்.. இந்த பணிகள் அத்தனையையும் அர்ச்சுனன், தன்னுடைய சொந்த பணத்திலேயே மயானத்தில் மரங்கள் நட்டு அதை கிட்டத்தட்ட சோலையாகவே மாற்றியுள்ளார்.

இதை அறிந்த தலைமைச்செயலர் இறையன்பு, முதியவர் அர்ச்சுனனை தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து உபசரித்தார். அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை சொல்லி மனமார பாராட்டவும் செய்தார்..
சபாஷ்: அவருக்கு பொன்னாடை அணிவித்து, 1,000 ரூபாய் பரிசளித்தார். மேலும், அந்த மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டி, நீர் வசதி ஏற்படுத்தி, நன்றாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டருக்கும் கடிதம் அனுப்பினார். முதியவரை தன்னுடைய அறையில் அமரவைத்து, இறையன்பு கனிவுடன் பேசும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications